tamilnadu epaper

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா)-08.04.25

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா)-08.04.25


சமையல் எரிவாயு 50 ரூபாய் உயர்வு 


பங்குச்சந்தை ஒரே நாளில் 


16 லட்சம் கோடி இழப்பு. இதனால்



அதானி அம்பானி மிகவும் 


பாதிக்கப்பட்டுள்ளார்கள் அதை 


ஈடு கட்டவே இந்த உயர்வு. 


அண்ணாமலையும் சீமானும் 


உள்ள நெருக்கத்தை பார்த்தால் 


பாஜக நாம் தமிழர் கட்சி கூட்டணி 


ஏற்படுமா. பதநீர் நுங்கு பற்றிய 


 கட்டுரை மிகவும் பயனுள்ள தகவல் 


மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் 


பட்நாயக் என்பவருக்கு சர்வதேச 


விருது வழங்கப்பட்டது. 


சரியான நடவடிக்கை.வக்பு


சட்டத்தால் ஜம்மு காஷ்மீர் 


சட்டசபையில் கடும் அமளி. 


ரிஷிவந்தியா சாரின் புற்றுநோய் 


கவிதை நல்ல விழிப்புணர்வு. 


அனைத்து நிதியையும் மத்திய அரசு 


நிறுத்தினாலும் எங்கள் ஆட்சி 


தொடரும் என அமைச்சர் 


 துரைமுருகன் அறிவிப்பு. 


கொடைக்கானல் சுற்றுலா 


 பயணிகளுக்கு. இ பாஸ் நடைமுறை 


அமல்படுத்தப்பட்டது. மணிப்பூர் 


கலவரத்துக்கு நிவாரணமாக 


217 கோடி வழங்கப்பட்டது. 


கலவரத்துக்கு யார் காரணம். 


புள்ளையையும் கிள்ளிவிட்டு 


தொட்டிலை ஆட்டிய கதை.


பள்ளி மாணவர்களுக்கு ஆதார் உட்பட 


அனைத்து சான்றுகளையும் 


ஆசிரியர்கள் சரி பார்க்க வேண்டும் 


பின்னர் எப்போ பாடம் நடத்துவது


ட்ரம்புக்கு எதிராக அமெரிக்காவில் 


நாடு முழுவதும் போராட்டம். 


வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க 


அது என்ன இந்தியாவா. 


நிதி பற்றாக்குறையால் தான் 


வரி விதிக்கப்பட்டது என டிரம்ப் 


சமாளிப்பு. நாளுக்கு நாள் பலதரப்பட்ட 


செய்திகளை வழங்கி அனைத்து 


தரப்பினரையும் அரவணைத்து 


செல்வதில் இ பேப்பர் க்கு நிகர் 


இல்லை என்பதை நிரூபித்து 


வருகிறது தமிழ்நாடு இ பேப்பர் 


தமிழ்நாடு இ பேப்பர் டீமுக்கு 


வாழ்த்துக்கள் சார். 



-நடேஷ் கன்னா

கல்லிடைக்குறிச்சி