tamilnadu epaper

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா)-09.04.25

வாசகர் கடிதம்  (நடேஷ் கன்னா)-09.04.25


மசோதா விஷயத்தில் உச்ச


 நீதிமன்றம் கவர்னருக்கு கொடுத்த 


அடி. பாஜக ஆளும் எல்லா மாநில 


கவர்னர்களுக்கும் பொருந்தும் 


இனிமேலாவது மசோதாக்களை 


காலம் தாழ்த்தாமல் பரிசீலனை 


செய்வது நல்லது. பொன்முடி 


மீதான சொத்து குவிப்பு வழக்கு 


ஏப்ரல் 17ஆம் தேதி இறுதி விசாரணை 



தினசரி ஒரு நடிகையின் கவர்ச்சி 


படம் போடவில்லை என்றால் 


உங்களுக்கு தூக்கம் வராதா. 


சின்னஞ்சிறு கோபுவின் கோலம் 


கவிதை அருமையான படைப்பு. 



தர்மபுரி கிருஷ்ணகிரி இங்குதான் 


மாம்பழம் விளைச்சல் அதிகம் 


அந்த மாம்பழங்கள் சேலம் 


சந்தைக்கு வருவதால் சேலம் 


மாம்பழத்துக்கு பேர் போனது 


உண்மையில் சேலத்தில் மாம்பழ 


விளைச்சல் குறைவுதான். 


ராகுலின் செயல்பாடுகள் 


 திருப்திகரமாக இல்லை எனவே 


பிரியங்கா அல்லது சோனியா 


தலைவர் பொறுப்பை ஏற்றால் 


நல்லது. வரிவிதிப்பை வாபஸ் பெற 


ட்ரம்ப் மறுப்பு இதனால் பங்குச்சந்தை 


அதிக அளவில் வீழ்ச்சி அடைந்து 


 வருகிறது. ஈரான் அணு ஒப்பந்தத்தை 


கைவிட வேண்டும் என அமெரிக்கா 


எச்சரிக்கை. ஈரானும் அணு ஆயுத 


விஷயத்தில் பிடிவாதமாக உள்ளது. 


சீனா விதித்துள்ள வரியை 


குறைக்காவிட்டால் 50 சதவீதம் 


கூடுதல் வரி விதிக்கப்படும் 


என ட்ரம்ப் எச்சரிக்கை. தேன் ராஜா 


அவர்களின் பயணம் கவிதையில் 


 நிலாவுடன் ஒப்பீடு செய்து இருப்பது 


நல்ல கற்பனை. கிட்டத்தட்ட 


30 கவிதைகள் உடன் இ பேப்பர் 


தினசரி அரங்கேற்றம் செய்கிறது 


வாழ்த்துக்கள் சார். புது 


 முகங்களுக்கும் இடம் கொடுக்க 


 வேண்டும் கோடை காலத்துக்கு 


ஏற்றவாறு இளநீர் நுங்கு பதநீர் 


போன்ற செய்திகளை வெளியிடுவது 


குளிர்ச்சியாக உள்ளது 



-நடேஷ் கன்னா

கல்லிடைக்குறிச்சி