தமிழ் நாடு இ பேப்பர்
அக்மார்க் தரம்
ஆனந்த ராகம்
இதயம் மலரும்
ஈடில்லா உயரம்
உன்னதத் தொடக்கம்
ஊரெல்லாம் வெளிச்சம்
எளிமையின் ஊற்று
ஏற்றத்தின் நாற்று
ஐந்திணைச் சுரங்கம்
ஒப்பிலா விருட்சம்
ஓய்வில்லா இயக்கம்
ஒளவை மூதுரை
அஃதெல்லாம் அடக்கம்
தனித்துவம் மிளிர்ந்து
தரணியே போற்றும்
தங்கத்தமிழ் பேப்பர்
தமிழ் நாடு இ பேப்பர்
தமிழ் வாழும் வரை
நீடூழி வாழிய
வாழியவே!
-நெல்லை குரலோன்
பொட்டல் புதூர்