tamilnadu epaper

வாசகர் கடிதம் (ப. தாணப்பன்)-01.04.25

வாசகர் கடிதம் (ப. தாணப்பன்)-01.04.25

வணக்கம்


     01.04.2025 'தமிழ்நாடு இ பேப்பர். காம்' வழக்கம் போல் அனைத்துச் செய்திகளையும் தாங்கிய நாளிதழாக வெளிவந்திருக்கிறது.



   பிரதமருக்கு தனிச்செயலாராக பணியாற்ற இருக்கும் நிதி திவாரிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.


  ரம்ஜான் கொண்டாடிய நமது இசுலாமிய உடன்பிறப்புகளுக்கு மீண்டும் வாழ்த்துகள்.


  மின்னணுவியல், ஆட்டோமேஷன், 3D பிரிண்டிங் துறைகளில் ஆதிதிராவிட இளைஞர்ளுக்கு தாட்கோ.மூலம் இலவச பயிற்சி வழங்க இருப்பது சிறப்பு.


  நீண்ட தூரம் செல்லும் வந்தேபாரத் ரயில்களில் படுக்கை வசதி செய்து பெட்டிகள் ஐசிஎஃபில் தயாரிக்க இருப்பது அவசிமான ஒன்று. 


    மாதந்தோறும் மின்கணக்கீடு திட்டம் விரைவில் அமல் என்பது ஆறுதல் அளிக்கும் செய்தி. ஆனால் மாதந்தோறும் மின்கணக்கீடு என்று தொகையை கூட்டிவிடக்கூடாது.


   வி.கலியாணசுந்தரனார் எனும் திருவிக பற்றிய கட்டுரை தொழிற்சங்கப் போராளி, தமிழ்தொண்டாற்றிய திலகம் என்கிற பன்முகத்தன்மையைக் காட்டியது.



   போகர் சித்தர் குறித்த கட்டுரை அவர் தந்த பழனி தண்டாயுதபாணியை மீண்டும் தரிசிக்கத் தூண்டியது. சித்தராக இருந்தாலும் கர்வம் கொண்டால் என்ன நடக்கும் என்பதையும் காட்டியது. போகரின் குரு காலங்கிநாதர் குறித்தும் அவரது சித்த மகிமைகளைத் தேடித்தரிசிக்கவும் வாசிக்கவும் தூண்டியது.


   ஶ்ரீகிருஷ்ணரிடம் இருக்கும் ஐந்து பொருட்கள் இனி கிருஷ்ணரைக் காணும் போதெல்லாம் கண்களில் தெரியும்.


  பிள்ளைகளின் விருப்பம் அறிவோம் எனும் கட்டுரை பிள்ளைகளின் மேல் பெற்றோர் தங்கள் விருப்பங்களைத் திணிக்காதிருக்கும் விழிப்புணர்வைத் தந்தது.



-தாணப்பன் கதிர்

( ப. தாணப்பன் )