வணக்கம்
08.04.2025 'தமிழ்நாடு இ பேப்பர். காம்' வழக்கம் போல் அனைத்துச் செய்திகளையும் தாங்கிய நாளிதழாக வெளிவந்திருக்கிறது.
ட்ரெம்ப்பின் வரிவிதிப்பு நபது பங்குச்சந்தையை வீழ்ச்சியடைய வைத்திருக்கிறது. மீண்டெழுந்து விடும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தற்போது முதலீடு செய்திருப்பவர்களுக்கு பேரிழப்புதானே.
சமையல் எரிவாயு விலை 50ரூபாய் அதிகரித்திருக்கிறது. இதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் தேவை இல்லை. தினந்தோறும் பயன்படுத்தும் செல்பேசி கட்டணங்கள் தாறுமாறாக உயர்த்த பட்ட போது எதுவுமே பேச இயலாத போது இந்த சொற்ப ஏற்றம் ஏற்புடையதே.
ஆயிரம் கோடி டாஸ்மாக் ஊழல் குறித்து பேச வாக்குவாதம் செய்ய எதிர்க்கட்சித் தலைவருக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
வாட்ஸ் அப் மோசடிகள். அலர்ட் செய்யும் சைபர் க்ரைம் போலீஸின் அறிவுறுத்தலை ஏற்றுக்கொள்ள வேண்டும். இருமுறை சரிபார்ப்பு எனும் முறையை செயல்படுத்தி வைத்திருக்க வேண்டும்.
உலகப் புகழ்பெற்ற மணற்சிற்பக் கலைஞர் சுதர்ஸன் பட்நாயக் பிரிட்டனின் ' தி ப்ரெட் டாரிங்டன் மணல் மாஸ்டர் விருது' பெறுவதற்கு வாழ்த்துகள்.
திருமணம் கைகூட பங்குனி உத்திர வழிபாடு எனும் கட்டுரை சிறப்பு. தென்தமிழகத்தில் குலதெய்வ வழிபாட்டுக்காக அன்று எல்லோரும் கூடுவர். பங்குனி உத்திர வழிபாடு நாட்டார் வழிபாடு மட்டுமல்ல நம் தொன்மையான வழிபாடும் கூட.
தினம் ஒரு தலைவர்கள் வரிசையில் நீலமேகம் பிள்ளை மற்றும் ப.ராமமூர்த்தி பற்றிய வரலாற்றுச் செய்திகள் அவ்விருவருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்திருந்தது.
சமையலறை டிப்ஸ் அருமை. பல்சுவைக் களஞ்சியயக் கட்டுரைகளும் சிறப்பு.
தங்களுக்கு மிகப்பெரிய நிதிப்பற்றாக்குறை என்று ட்ரெம்ப் கூறியிருக்கிறார். அதற்காக அடுத்த நாட்டு பொருட்களின் மேல் கூடுதல் வரிவிதிப்பை ஏற்க இயலாது.
சமூக பாதுகாப்பு, மருத்துவ உதவியைக் குறைத்ததாக ட்ரெம்ப்பிற்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்கள் நலனை அவர் கருத்தில் கொள்ள வேண்டிய தருணம் இது.
-தாணப்பன் கதிர்
( ப. தாணப்பன் )