வாழ்க்கையில் எல்லோரும் விரும்பும் தேநீர் பானமாக நாம் இருக்க முடியாது!!
வாழ்க்கையில் அனைவரும் புகழும்படி வாழ முடியாது.
எவ்வளவு நன்றாக இருந்தாலும் சிலரை திருப்தி படுத்த முடியாது. நம்மை பிடிக்காத சிலர் இருப்பர்.
நம் வார்த்தை எப்போதுமே அனைவராலும் ஒப்புக் கொள்ளப்படாது.
ஒரு சிலர் நீங்கள் சொல்வதிலும் , செய்வதிலும் குற்றம் கண்டு பிடித்தபடிதான் இருப்பர்.
இதற்கெல்லாம் விடை கிடைக்காது. விடை தேடுவதும் வீண் முயற்சி. வாழ்க்கையின் பொன்னான நேரங்களை இது போன்ற விஷயங்களில் வீணாக்க கூடாது .
எல்லோரும் குடிக்க விரும்பும் தேநீர் பானமாக நாம் இருக்க முடியாது.
அதேபோல் நம்மை பிடித்தவர்களும் பலர் இருப்பர் . நம் மீது கண்மூடித்தனமாக பாசம் வைத்திருப்பர்.
இவர்கள்.. இவர்களே ஆத்ம பந்துக்கள்!!!
கிடைத்த நேரத்தை இவர்களுடன் செலவழியுங்கள்.
நாம் எல்லோரும் விரும்பும் தேநீர் பானமாக இருக்க முடியாது, ஆனால் கோடைகாலத்தில் சிலர் விரும்பும் குளிர்ந்த பானமாக இருக்கலாம். உனக்கு தேவையானவற்றை, உன்னை பிடித்தவர்களுடன் நெருங்கி இருக்கவும்.
-நளினி கோபாலன்
ஹைதராபாத்