நந்தினி வாடகைக்கு குடியிருந்த வீடு வாஸ்து முறைப்படி கட்டப்பட்டு இருந்ததாலோ என்னவோ அங்கு வந்தவுடன் வசதியாக உணர்ந்தாள் வீட்டு ஓனரின் தொல்லை அதிகமாக இருந்தது. திடீரென வீட்டைக் காலிசெய்ய சொல்லிவிட்டார்கள் வயதான மாமியார் மாமனாரை வைத்துக்கொண்டு வசதியான வீடு கிடைக்கவே இல்லை. நந்தினியும் சிவாவும் தேடித்தேடி அருகிலேயே ஒரு இடத்தில் பிளாட் வாங்கி அவர்கள் குடியிருந்த அதேமாதிரி வாஸ்து உள்ள வீடு கட்டினாள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. புதிய வீடு கட்டி உடன் அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கணவனிடம் நாம் வாஸ்து முறைப்படி கட்டி இருப்பதால்தான் நல்ல பலனை தருகிறது என்று சொல்ல அவர்கள் வாழ்க்கையில் மென்மேலும் வளர்ந்து. அனைத்து தோழிகளிடமும் கணவர் எனக்கு கட்டிக்கொடுத்து தாஜ்மஹால் என்று பெருமையாக சொல்லி கொண்டாள் வீட்டு ஓனர் தொல்லை வந்திருக்காவிட்டால் இதுபோன்ற ஒரு வீடு கட்டிய இருக்க மாட்டாள். வாழ்க ஹவுஸ் ஓனர் என்று மனதுக்குள் வாழ்த்திக் கொண்டாள்.
Ushamuthuraman
Madhurai