விளாத்திகுளம் சாரோன் மேல்நிலைப்பள்ளி அருகில் பாரதி இலக்கிய மன்ற அலுவலகம் மற்றும் புத்தக நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. பாரதி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர் த.முத்துப்பாண்டி வரவேற்றார். இளையராஜா இனிப்பக நிறுவனரும் இலக்கிய ஆர்வலருமான திரு. மாரியப்பன் புத்தக நிலையத்தை திறந்து வைத்தார். எழுத்தாளர் வேம்பார் மு.க இப்ராகிம், ஆசிரியர்கள் திரு ஆனந்தராஜ், திரு எஸ்.கே மாரியப்பன், திரு செந்தில் குமரன், திரு. உ சங்கரவேல் இசைக்கலைஞர் விளதை கண்ணன் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். தமிழாசிரியர் நாகராஜன் நன்றி கூறினார்.