tamilnadu epaper

விழியின் ஓசை கவிதை நூல் வெளியீட்டு விழா*

விழியின் ஓசை கவிதை நூல் வெளியீட்டு விழா*

கவிஞர் சீ. பாஸ்கர் எழுதிய "விழியின் ஓசை" கவிதை நூல் வெளியீட்டு விழா கூடுவாஞ்சேரியில் உள்ள வித்யா மந்திர் எஸ்டான்சியா பள்ளியில் 29/ 6 /2024 சனிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது. 

 

நூலின் முதல் பிரதியை பட்டிமன்ற பேச்சாளர் திரு. அருள் பிரகாஷ் அவர்கள் வெளியிட சாகித்ய அகாடமி விருதாளர் கவிஞர் மு. முருகேஷ் அவர்கள் பெற்றுக் கொண்டார். 

 

உரத்த சிந்தனை இதழின் ஆசிரியர் திரு. உதயம் ராம் மற்றும் கவிஞர் முனைவர் ஆதிரா முல்லை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

 

நிகழ்ச்சியில் செல்வி பா. யாழினி வரவேற்புரை ஆற்ற செல்வன் பா. ஆதவன் நிகழ்வை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

 

இறுதியாக , நூலின் ஆசிரியர் திரு சீ. பாஸ்கர் அவர்கள் ஏற்புரையாற்றினார்.

 

இந்நிகழ்வில் பள்ளி முதல்வர் திருமதி சங்கரி ரவி, துணை முதல்வர் முனைவர் மீனாட்சி ஜானகிராமன், ஆசிரியர்கள் , முன்னாள், இந்நாள் மாணவர்கள், நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.