தஞ்சாவூர் மகர்நோம்புச்சாவடி, V.P.கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி ஶ்ரீ அலமேலு மங்கா ஸமேத ஸ்ரீ ப்ரஸன்ன வேங்கடேஸப் பெருமாளை நேற்று (11.05.2025) ஞாயிற்றுக்கிழமை இரவு *ஸ்ரீ அனுமந்த வாகனத்தில்* எழுந்தளித்து மின் விளக்குகளால் அலங்கரித்து நாதஸ்வர இன்னிசைக் கச்சேரியுடன் வீதியுலா சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் திரு.B.S. சேஷாத்திரி அவர்கள், ஸ்ரீ அனுமந்த வாஹன சுவாமி புறப்பாடு குழு மற்றும் உபயதார்கள் செய்து இருந்தனர்.