. திருவண்ணாமலை 7.5.2025 அருள்மிகு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் காலை 6 மணிக்கு கோமாதா பூஜை, பரி பூஜை கோயிலிருந்து ஊர்வலமாக சென்று சமாஜ கொடியினை ஏற்றினார்கள். பிறகு கலசங்கள் வைத்து தம்பதிகளாக அமர்ந்து சங்கல்பம் செய்து கொண்டனர். சாமிக்கு பெண்கள் அனைவரும் தலையில் பால்குடம் ஏந்தி ஆலயம் சுற்றி வந்து அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்தனர்.மூலவர் சாமிக்கு பாலசுப்பிரமணிய ஐயர், கணேஷ் ஐயர், யாகேஷ் ஐயர் ஆகிய மூவரும் சேர்ந்து பல வண்ண மலர்களால் அலங்கரித்தனர். பிறகு பெண்கள் அனைவரும் சேர்ந்து குங்குமம் அர்ச்சனை செய்தனர் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, வளையல்,தாம்பூலம் வழங்கினார்கள். மூலவருக்கு தீபாராதனைகள் நடைபெற்றது. பிறகு கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆரிய வைசிய ஆண்கள், பெண்கள் இரத்த தானமும் வழங்கினார்கள்.மதியம் ஒரு மணி அளவில் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த விழாவினை ஏற்பாடு செய்த ஆரிய வைசிய சமாஜத் தலைவர் A. C மணிகண்டன் அவர்கள், மற்றும் சமாஜ உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு வேண்டி கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் அருளை பெற்றனர்.இரவு முத்து பல்லக்கு ஊர்வலத்தில் பெண்கள் கோலாட்டம், மேளதாளத்துடன் ஊர்வலம் நடந்தது. இரவு கன்னிகா பரமேஸ்வரி அம்மன் மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரமும் இரவு உபயதாரர் A.செந்தில் அவர்கள் செய்தனர். ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்யா வைசிய மக்கள் அனைவரும் வாசவி அம்மனை மேளதாளத்துடன் வெகு விமர்சையாக கொண்டாடினார்கள்.