அதிமுக கூட்டத்தில் தவெக கொடி நல்ல விஷயம் தானே'நயினார் நாகேந்திரன் வரவேற்பு

அதிமுக கூட்டத்தில் தவெக கொடி நல்ல விஷயம் தானே'நயினார் நாகேந்திரன் வரவேற்பு

'

ஸ்ரீவைகுண்டம், செப். 11-

அதிமுக கூட்டத்தில் தவெக கொடி பறப்பது நல்ல விஷயம்தான் என்று நயினார் நாகேந்திரன் வரவேற்றுள்ளார்.


ஸ்ரீவைகுண்டம் அருகே கால்வாயில் நடந்த விழாவில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 

 அடுத்த ஆண்டு தேர்தலில் தீய சக்தியை அகற்றி பாஜக கூட்டணி வெற்றிபெற அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம். மதுரையில் அக். 12-ம் தேதி மாலை 6 மணிக்கு எழுச்சி பயணம் தொடங்க உள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆளும் திமுக அரசு நான்கரை ஆண்டு காலத்தில் என்னென்ன செய்தது, என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்து அதை நிறைவேற்றாமல் உள்ளார்கள் என்பது குறித்து மக்களிடம் விளக்க உள்ளோம். 

அதிமுக பிரச்சார கூட்டத்தில் விஜய் கட்சியின் கொடி இருப்பது நல்ல விஷயம் தானே. மேலும் ஒரு நாட்டில் நல்ல விஷயம் நடக்கும் போது தலைவர்கள் கூடி பேசுவார்கள். ஆனால், தற்போது தொண்டர்களாகவே முடிவெடுத்து வருகிறார்கள். அப்படி என்றால் ஆட்சி மேல் அவர்களுக்கு எவ்வளவு நம்பிக்கை குறைவு இருக்கும். தொண்டர்களின் முடிவு வெற்றியாக அமையும் என்பது தான் எனது கருத்து. 

 இவ்வாறு கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%