துபாயில் சிக்கித் தவிப்போருக்கு நிபந்தனையற்ற உதவி - நடிகர் சோனு சூட் அறிவிப்பு!
Mar 05 2026
99
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக துபாயில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு, தங்குவதற்குப் பாதுகாப்பான இடவசதி செய்து தருவதாகப் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் அறிவித்துள்ளார்.
அணுசக்திப் போட்டி மற்றும் பிராந்திய மோதல்கள் காரணமாக, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து கடந்த சனிக்கிழமை முதல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதற்குப் பதிலடியாக ஈரானும் அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருவதால், மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பெரும் போர்ப்பதற்றம் நிலவுகிறது.
பாதுகாப்பு கருதிப் பல நாடுகளின் வான்வெளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் துபாய் உள்ளிட்ட நாடுகளுக்குச் சுற்றுலா மற்றும் வேலை நிமித்தமாகச் சென்ற ஆயிரக்கணக்கான பயணிகள், விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். கொரோனா பேரிடர் காலத்தில் பல்லாயிரக்கணக்கானோருக்கு உதவிய நடிகர் சோனு சூட், தற்போது துபாய் பயணிகளுக்காக மீண்டும் முன்வந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் 'X' தளப் பதிவில் கூறியிருப்பதாவது: "போர்ச் சூழல் காரணமாகப் பல பயணிகள் துபாயில் தங்குவதற்கு இடமின்றித் தவித்து வருகின்றனர். நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களோ துபாயில் இக்கட்டான நிலையில் இருந்தால், நாங்கள் பாதுகாப்பான தங்குமிடத்தை முற்றிலும் இலவசமாக வழங்குகிறோம்."
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?