news Breaking News
clock

டாஸில் முகமது ஆமீர் வாக்கு பலித்தது.. மும்பை ரசிகர்களை சைலண்ட் செய்வேன் பாருங்க.. ஹாரி ப்ரூக் சவால்!

டாஸில் முகமது ஆமீர் வாக்கு பலித்தது.. மும்பை ரசிகர்களை சைலண்ட் செய்வேன் பாருங்க.. ஹாரி ப்ரூக் சவால்!

மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

இங்கிலாந்து அணி சேஸிங் செய்தால் இந்திய அணி தோல்வி அடையும் என்று முகமது ஆமீர் கணித்திருந்த சூழலில், இந்திய ரசிகர்களிடையே கவலை ஏற்பட்டுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணி பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ளது. டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை மும்பை வான்கடே மைதானத்தில் டாஸ் வென்றால் சேஸிங் செய்வதே சரியான தேர்வாக பார்க்கப்படும். ஐபிஎல் தொடர்களின் போது வான்கடே மைதானத்தில் ஏற்படும் பனிப்பொழிவு பவுலிங் செய்யும் அணிகளுக்கு புதிய அழுத்தத்தை கொடுக்கும்.

இப்படியான சூழலில் டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதன்பின் ஹாரி ப்ரூக் பேசுகையில், நாங்கள் பவுலிங்கை தேர்வு செய்துள்ளோம். நல்ல பிட்ச்சாக தெரிகிறது. பவுலிங்கில் நல்ல தொடக்கம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

எங்களை விடவும் இந்திய அணிக்கு இந்த மைதானத்தில் விளையாடிய அனுபவம் அதிகம் இருக்கும். ஆனால் டி20 கிரிக்கெட்டில் எந்த மைதானத்தில் என்ன நடக்கும் என்றே தெரியாது. வான்கடே மைதானத்தில் குவிந்துள்ள ரசிகர்களை சைலண்ட்டாக வைத்திருப்போம் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார். இதனால் இந்திய ரசிகர்களிடையே ஒரு பீதி ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால் 2023 உலகக்கோப்பை தொடரில் இப்படியான பேட் கம்மின்ஸ் விராட் கோலி விக்கெட்டை எடுத்த பின் மொத்த மைதானமும் அமைதியானது. அதேபோல் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது ஆமீர், டாஸை இங்கிலாந்து அணி வென்று பவுலிங்கை தேர்வு செய்தால், இங்கிலாந்து வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று கூறி இருந்தார்.

அவர் கூறியதை போலவே இங்கிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்திருக்கிறது. இந்திய அணியை சமாளிக்க டாஸன், ஆதில் ரஷீத் மற்றும் வில் ஜாக்ஸ் ஆகிய 3 ஸ்பின்னர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதிலும் வில் ஜாக்ஸ் இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 4ல் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தி இருக்கிறார். இதனால் இந்திய ரசிகர்களை பதற்றம் சூழ்ந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%