அந்தக் காலத்தில் குக்கிராமங்களில் வழக்கமாக இருந்த நடைமுறைகள்
Jul 23 2025
10

1.ஏப்ரல், மே மாதங்களில் பகலில் வெயில் அதிகமாக இருந்தால் இன்று கட்டாயம் மழை வரும் என்று கருதி வாசலில் இருக்கும் விறகுகளை எடுத்து திண்ணையில் வைத்து விடுவார்கள்.
2. ஏதேனும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவோ அல்லது வேறு காரணத்திற்காகவோ வெளியே செல்லும்போது பூனை குறுக்கே ஓடினால் அந்த நாள் நிகழ்ச்சியை ரத்து செய்து விடுவார்கள்.
3. அதேபோல் காலில் அணிந்திருக்கும் செருப்புக் கல்லில் பட்டு நடப்பவர்களை தடுமாற வைத்தாலும் அன்றைய நிகழ்ச்சியை ரத்து செய்து விடுவார்கள். 4.அதேபோல் வெள்ளைப் புடவை அணிந்த பெண் நேர் எதிரே வந்தாலும் அது எவ்வளவு முக்கிய நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டியதாக இருந்தாலும் போக மாட்டார்கள். மீண்டும் வீடு திரும்பி தண்ணீர் குடித்துவிட்டு செல்பவர்களும் உண்டு.
5. இடது கண் துடித்தால் இன்று ஏதோ கெட்ட சம்பவம் நடக்கும் என்று நம்புவார்கள்.
6. வீட்டின் இடதுபுறத்திலோ அல்லது அவர்கள் வீட்டின் அமைப்புப்படி வலதுபுறத்திலோ பல்லி கத்தினால் அன்று ஏதேனும் துர் சம்பவம் நடக்கும் என்று நம்புவார்கள்.
7. பஞ்சாங்கத்தில் கீழ்நோக்கு நாள் பார்த்து நிலக்கடலை கிழங்கு வகைகள் ஆகியவற்றை பயிரிடுவார்கள். மேல்நோக்கு நாள் என்றால் கம்பு கேழ்வரகு மிளகாய் போன்றவற்றை பயிரிடுவார்கள்.
8. சாமக்கோடாங்கி என்பவன் நடு இரவில் வந்து ஒரு வீட்டின் முன்பு நின்று உங்களுக்கு நல்ல காலம் பொறக்குது.. நல்ல காலம் பொறக்குது.. என்பான். அதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். அந்த வீட்டிற்கு அவன் காலையில் வந்து விடுவான். அவனுக்கு தானிய வகைகள் கொடுத்து மகிழ்வார்கள். கெட்டது நடக்கும் என்று சொன்ன வீட்டிற்கும் காலையில் செல்வான். அவன் சொன்னதை அப்படியே நம்பி அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறி அவன் கேட்பதை அப்படியே கொடுத்து விடுவார்கள். அந்தக் கோடாங்கி இரவில் வந்து உடுக்கை அடிக்கும் சப்தத்தை கேட்டாலே சிறுவர்களான நாங்கள் பயந்து நடுங்கி போர்வையை தலை முழுக்க போர்த்திக் கொண்டு விடுவோம்.
அன்புடன்
உ.மு.ந.ராசன் கலாமணி
4, சுபி இல்லம்
கிழக்குப் பூங்கா தெரு
கோபிச்செட்டிப்பாளையம் 638452.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?