கருவிலே கடவுளோடு தொடங்கும் மெளனப் பேச்சு
பவளவாய் திறந்து
'அம்மா' என்னும்
குழந்தையின் முதல் உச்சரிப்பு
பெற்றோரின் திருமணத்ததில்
தன்னைத் தேடும் ...
"ஆண் குழந்தை அறிவாளி" "பெண்குழந்தை வாயாடி"
எனப் பட்டமளிக்கும் சுற்றத்தின் பகட்டான பாராட்டும் பேச்சு
ஏன்? எப்படி? எதற்கு?...
கேள்விக் கணை தொடுத்து
விதண்டாவாத வாக்குவாதம்
ஏச்சு... பேச்சு... ஏராளம்
ஆனால்,
படிப்பால், வித்தையால்
பட்டயத்தால் வருவதல்ல... பேச்சு
இடம் அறிந்து,
பொருள் உணர்ந்து,
உற்ற தருணத்தில்
உறுதியாகப் பேசுவதே
உண்மையான கலை.
உலகெல்லாம் தேடி அலைந்து அனுபவ ஆசான் அளிக்கும்
அந்தப் பட்டய அறிவை...
பட்டுதான் பெற வேண்டும்!
அனுபவப்பட்டுதான் பெற வேண்டும்!!
நா.பத்மாவதி
கொரட்டூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?