அன்னையே

அன்னையே


அன்பிலே குழைந்தெடுத்து.. அமுதமாகப் பால் சுறந்து..பண்புயெனும் தொட்டிலிட்ட அன்னையே.!இன்று பாடுவது நீ சுமந்த பிள்ளையே!


தந்தான தானத்தனே

தந்தான தானத்தனே தந்தான தானத்தனே தனானே...


முந்தித் தவமிருந்து..

முன்னூறு நாள் சுமந்து..

முப்பாலைப் புகட்டியதார் அன்னையே..அன்று

தத்தித் தவழ்ந்துவந்து தரையினிலே விழுந்தயென்னை.. தாங்கிப் பிடித்தது யார் அன்னையே.. தமிழ்த் தாய் அருளால்ப் பாடுவதுன் பிள்ளையே.!



தரிசாகக் கிடந்த என்னை... தாலாட்டிப் பால்வார்த்து புதிதாக மாற்றி வைத்த அன்னையே.. இன்று பூங்கவிதைப் பாடுவதுன் பிள்ளையே!

அறியாமை இருள் நீக்கி..

அன்பினால் விழிதிறந்து

உருவாக்கி வைத்தவள் யார் அன்னையே.. உனக்கு நன்றி சொல்லிப் பாடுவதுன் பிள்ளையே.!


*வே.கல்யாணகுமார்.*

( தாழையாம் பூ முடித்து... என்ற திரைமெட்டில் பாடி மகிழ்கவே!)

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%