அம்மாபட்டினம் அரசுப் பள்ளியில் அறுந்து விழுந்த மின்கம்பி மாணவர்கள் உயிர் தப்பினர்
அறந்தாங்கி, ஆக.27 -
அம்மாபட்டினம் அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளி வளா கத்தில் வெளிப்புறமாக மின்கம்பி அறுந்து விழுந்ததால் மாணவர்கள் உயிர் தப்பினர். புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினத்தில், அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 168 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி வளா கத்தின் நுழைவாயில் பகுதிக்கு மேலே, உயர் அழுத்த மின்கம்பி செல்கிறது. இந்த உயர் அழுத்த மின்கம்பி திங்கட் கிழமை காலை அறுந்து, நுழைவாயில் பகுதியில் விழுந்து உள்ளது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் மின் வாரியத்திற்கு தகவல் தெரிவித்து, மின்சாரத்தை நிறுத்தினர். மாணவர்கள் பள்ளிக்கு வரும் நேரத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் மாணவர்கள் உயிர்தப்பினர். அதன் பின்னர், காலை 10 மணிக்கு மேல் வந்த மின்சாரத் துறையினர் அறுந்து விழுந்த மின் கம்பிகளை சரி செய்தனர். அறுந்து விழுந்த மின் கம்பியில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு பழுதடைந்து இருந்தது. இதேபோன்று, அம்மா பட்டினம் பகுதிகளில் பல இடங்களில் மின் கம்பிகள் பழுதடைந்து இருப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர். சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தஞ்சாவூர், ஆக.27 - தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், திருவத்தேவன், குப்பத்தேவன், சோலைக்காடு, செம்பியன் மாதேவிப்பட்டினம், விளங்குளம், செந்தலைவயல் ஊராட்சி பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மந்திரிபட்டினம் புயல் பாதுகாப்பு மையத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் தலைமை வகித்து முகாமைத் தொடங்கி வைத்தார். முகா மில், 330 மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் உள்ளிட்ட 723 பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அரசு அலுவலர்களிடம் அளித்தனர். மேலும், 300 பயனாளி களுக்கு சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் நூறு நாள் வேலைத்திட்ட அடையாள அட்டையை வழங்கினார். தேசிய ஊரக உறுதித் திட்ட மாவட்ட குறை தீர்ப்பாளர் நியமனம் தஞ்சாவூர், ஆக.27 - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் 27 ஆவது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச்சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறை தீர்ப்பாளர் பணி உரு வாக்கப்பட்டுள்ளது. அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் குறைகளைத் தீர்ப்பதற்காக பி.திரு மலைசாமி தஞ்சாவூர் மாவட்டத்திற்கான குறை தீர்ப்பாள ராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய கைப்பேசி எண். 8925811326 மற்றும் மின்னஞ்சல் முகவரி [email protected] ஆகும். பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் மேற்கண்ட குறை தீர்ப்பாள ரின் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். தீபாவளி பட்டாசுக் கடைகள்: தற்காலிக உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் தஞ்சாவூர், ஆக.27 - தீபாவளிப் பண்டிகையையொட்டி, பட்டாசுக் கடை அமைத்திட விரும்புவோர், வெடிபொருட்கள் சட்டம், 1884 மற்றும் வெடிபொருட்கள் விதிகள், 2008-இன்படி, தற்காலிக உரிமம் பெற வேண்டும். மேலும். உரிமம் பெற விரும்புவோர், கடை அமைந்துள்ள கட்டடத்திற்கான வரைபடம், கடை அமைந்துள்ள இடத்தின் சட்டப்பூர்வ உரிமைக்கான ஆவணங்கள், முகவரிக்கான சான்று, அரசுக் கணக்கில் ரூ.500/-செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றிற்கான நகல்களையும், பாஸ்போர்ட் அளவு புகைப் படத்தையும் இணைத்து, இணைய வழியில் (https://tnedistrict.tn.gov.in) 20.9.2025-க்குள் விண்ணப்பித்திட வேண்டும். 20.9.2025-க்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்க ஜம் தெரிவித்துள்ளார். ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக்கலை பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு பெரம்பலூர், ஆக.27 - பெரம்பலூர் மாவட்டத்தில் தாட்கோ மற்றும் தனியார் நிறு வனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யின இளைஞர்களுக்கு அழகுக்கலை மற்றும் சிகை அலங்கார பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யின இனத்தைச் சார்ந்த 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தவராக இருக்க வேண்டும். 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப வரு மானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள். மேலும் சென்னையில் தங்கிப் படிக்கும் வசதியும், இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால், அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியினை வெற்றிகர மாக முடிக்கும் இளைஞர்களுக்கு தனியார் அழகு நிலையங் களில் பணிபுரிய வேலை வாய்ப்பு வழங்கி ஆரம்ப காலமாத சம்பளமாக ரூ.10,000/- முதல் ரூ.20,000/- வரை பெறலாம். இப்பயிற்சி பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். தங்கும் விடுதி, உணவு உட்பட செலவினம் தாட்கோ நிறுவனம் மூல மாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர், தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து பயன டையுமாறு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.