news Breaking News
clock

சீன அதிபருடன் ரஷிய அதிபர் புதின் உரையாடல்!

சீன அதிபருடன் ரஷிய அதிபர் புதின் உரையாடல்!


 

சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.


மேற்குலக நாடுகளின் தலைவர்கள் சமீபகாலமாக சீனாவுடனான உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாக அந்நாட்டு அதிபர் ஷி ஜிங்பிங்கை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த நிலையில், சீனா உடன் முக்கிய உறவுகளை மேம்படுத்துவதற்காக அதிபர் ஜிங்பிங்குடன் ரஷிய அதிபர் புதின் காணொலி மூலம் புதன்கிழமை (பிப். 4) உரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உக்ரைன் மீதான ரஷியாவின் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில் இந்த உரையாடல் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. இருப்பினும், இந்த உரையாடல் குறித்த முழுமையான தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.


கடந்த சில நாள்களுக்கு முன்பு சீனா சென்றிருந்த ரஷியாவின் பாதுகாப்பு ஆணையத்தின் செயலாளர் செர்ஜீ ஷோய்கு, அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி வாங் யீயை சந்தித்து உரையாடினார்.


ஏற்கெனவே, கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் ஆகியோர் சீனாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு அதிபர் ஜிங்பிங்குடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். மேலும், வரும் நாள்களில் ஜெர்மனியின் தலைவரும் சீனாவுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News