சிஎஸ்கே–திருவள்ளூர் டிசிஏ இன்டர் காலேஜ் டி20 போட்டி: கோஜன் எஸ்பிடி அணி அபார வெற்றி

சிஎஸ்கே–திருவள்ளூர் டிசிஏ இன்டர் காலேஜ் டி20 போட்டி: கோஜன் எஸ்பிடி அணி அபார வெற்றி


திருவள்ளூர், பிப். –


சிஎஸ்.ேக–திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் இன்டர் காலேஜ் டி–20 கிரிக்கெட் போட்டி 2025–26 இரண்டாம் சுற்றுப் போட்டிகள் பரபரப்பாக நடைபெற்றன.


ஸ்ரீஹர் கல்லூரி அணி 20 ஓவர்களில் 196 ரன்கள் (8 விக்கெட்) குவித்தது. பி. பிரணவ் 76 ரன்கள் எடுத்து அணியின் ரன்னை உயர்த்தினார். 2வது களம் இறங்கிய நாசரேத் கல்லூரி 10.3 ஓவர்களில் 43 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.


ஜெயா ஆர்ட்ஸ் கல்லூரி 20 ஓவர்களில் 150/4 ரன்கள் எடுத்தது. எம். மோகித் சிங் 55 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தார். வேல்டெக் ஆர்.எஸ். ஆர்ட்ஸ் அணி 40 ரன்களுக்கு சுருண்டது.


மார்கிரிகோரியஸ் கல்லூரி 181/3 ரன்கள் குவித்தது. எம்.டி. ஆர்யன் சாஜித் 67 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார். ஜி.ஆர்.டி. ஐ.இ.டி அணி 116/7 ரன்கள் மட்டுமே எடுத்தது.


மற்றொரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கிறிஸ்ட் ஆர்ட்ஸ் அணி, 13.2 ஓவர்களில் 50 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்து கல்லூரி அணியின் யேசுராஜ் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை 6 ரன்களுக்கு கைப்பற்றினார்.


தொடர்ந்து பேட்டிங் செய்த இந்து கல்லூரி, எந்த விக்கெட்டையும் இழக்காமல் 5.4ஓவர்களில் 51 ரன்கள் எடுத்து இலக்கை எளிதாக எட்டியது. சிவனேசன் 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.


கோஜன் எஸ்பிடி அணி


எளிதான வெற்றி


மற்றொரு ஒருதலைப்பட்சமான போட்டியில், எல்என்ஜி அரசு கல்லூரி அணி 11.5 ஓவர்களில் 66 ரன்களுக்குஆல் அவுட் ஆனது. கோஜன் எஸ்பிடி அணியின் முகமது தன்வீர் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை 24 ரன்களுக்கு கைப்பற்றினார். அவருக்கு துணையாக கிஷோர் குமார் 3 விக்கெட்டுகளை 5 ரன்களுக்கு வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த கோஜன் எஸ்பிடி அணி, 6.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்து இலக்கை எளிதாக கடந்தது. இதன்மூலம் கோஜன்எஸ்பிடி அணி சுலபமான வெற்றியை பதிவு செய்தது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%