ஈரோட்டில் வீட்டினுள் பதுக்கி வைத்திருந்த 5,500 விலையில்லா வேட்டி, சேலைகள் பறிமுதல்
Feb 05 2026
62
ஈரோடு: தமிழக அரசின் விலையில்லா வேட்டி, சேலை திட்டத்தில் வழங்கப்படும் 5,500 வேட்டி, சேலைகள், கோவையில் இருந்து கடத்தி வரப்பட்டு ஈரோடு வளையக்கார வீதியில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருப்ப தாக, வருவாய்த் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வருவாய்த் துறையினர் அந்த வீட்டுக்குச் சென்று சோதனையிட்டனர். அங்கு, அரசின் விலையில்லா திட்டத்தில் வழங்கப்படும் வேட்டி, சேலைகள் 5 பெரிய பண்டல்களில் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
அந்த பண்டல்களில் மொத்தம் 5,500 வேட்டி, சேலைகள் இருந்தன. இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு வருவாய்த் துறை அலுவலர்கள் தகவல் அளித்தனர்.
அங்கு வந்த போலீஸார், வேட்டி, சேலைகள் இருந்த பண்டல்களையும், அவற்றை எடுத்து வருவதற்குப் பயன்படுத்திய சரக்கு லாரியையும் கைப்பற்றினர்.
இந்த விவகாரம் தொடர்பாக வீட்டில் இருந்தவர்கள் உள்பட 3 பேரிடம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?