
தர்மபுரி, ஜூலை 30-
ஆடி 18 தினத்தை ஆடிப்பெருக்கு விழாவாக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.அன்று நீர் நிலைகளில் புனித நீராடி குலதெய்வங்களை வழிபடுவார்கள். ஆடு பலியிட்டு படையல் செய்து பூஜையுடன் வழிபாடு நடத்துவது தருமபுரி மாவட்ட மக்களின் பாரம்பரியமான வழக்கம். வரும் ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், நல்லம்பள்ளி செவ்வாய்க்கிழமை வார சந்தையில் ஆடுகளை வாங்க ஏராளமானோர் குவிந்தனர்.ஆடு ஒன்று குறைந்த விலை 7,000 ரூபாயில் தொடங்கி 35 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. ஆடிப் பெருக்கையொட்டி இன்று கூடிய செவ்வாய்க்கிழமை வார சந்தையில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று மட்டும் வாரச் சந்தையில் சுமார் 2,000 ஆடுகள் 2 கோடி ரூபாய் மதிப்பிற்கு விற்பனையானது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?