
நம்ம ஊரில் ஆந்தை முகத்தில் நாம் விழித்தால் நல்லதில்லை என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஆனால் வட மாநிலங்களில் ஆந்தை முகத்தில் விழித்தால்,பணம் கொட்டும் என்று நம்புகிறார்கள்.
பொதுவாகவே எல்லா இந்து மதக் கடவுளுக்கும் வாகனம் உண்டு. அன்னப்பறவை சரஸ்வதி-பிரும்மாவின் வாகனமாகவும், ரிஷபம் (காளை) பார்வதி- பரமசிவன் வாகனமாகவும், கருடன் லட்சுமி- விஷ்ணுவின் வாகனமாகவும் இருப்பது போல லட்சுமியின் பிரத்யோக வாகனம் ஆந்தை என்று வடமாநில மக்கள் நம்புகின்றனர். சாதாரணமாகவே அவர்கள் வெளியில் கிளம்பும்போது ஆந்தை கண்ணில் பட்டால் போகும் காரியம் நல்லதாக அமையும் என்று நம்புகிறார்கள்.
அதுவும் தீபாவளி தின இரவில் வீட்டுத் தோட்டத்திலோ, வீட்டுக்கு அருகிலோ ஆந்தை வந்தால் அதை அதிஷ்டமாகவே கருதுகின்றனர்.
தீபாவளி அன்று மாலையில் வட மாநிலங்களில் லட்சுமி பூஜை கொண்டாடடுவது வழக்கம். பீகாரில்தான் அதிக அளவில் இந்த பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
லட்சுமி பூஜைக்கு லட்சுமியின் வாகனமான ஆந்தைகளை வாங்கிச் சென்று பூஜை செய்து, மறுநாள் அதன் முகத்தில் விழித்தால் காசு கொட்டும் என்று அந்த மாநில மக்கள் நம்புகிறார்கள். எனவே ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சீசனில், அதிக அளவில் ஆந்தைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு வருடமும் தீபாவளியின்போது பீகாரில் ஹாஜிப்பூர், வைசாலி உள்ளிட்ட இடங்களில் விற்பனை அமோகமாக நடக்கிறது. இமயமலை அடிவாரத்தில் உள்ள காடுகளில் இருந்து ஆந்தைகளை, பறவை பிடிப்பவர்கள் சட்டவிரோதமாக பிடித்து வந்து சந்தைகளில் விற்பனை செய்கின்றனர்.ஒரு ஆந்தை மூவாயிரம் முதல் ஆறாயிரம் விலை போகுமாம்!
-சின்னஞ்சிறுகோபு ,
சென்னை.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?