ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்பு

 திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின்கீழ் இயங்கும் அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு ஆற்றுப் படுத்துநர்கள் மூலம் மதிப்பூதியம் அடிப்படையில் ஆற்றுப் படுத்துதல் சேவை வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிக்கு தகுதியான உளவியல் மற்றும் ஆற்றுப் படுத்துதலில் முதுகலைப் பட்டம் பெற்ற நபர்கள் அவர்களது விண்ணப்பங்களை உரிய கல்விச் சான்று களின் ஒளிநகலுடன் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படு கிறது. தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் தேர்வுக் குழு மூலம் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். அரசு குழந்தைகள் இல்லத்திற்கு ஒரு பணியிடம் தேர்வு செய்யப்படும் ஆற்றுப்படுத்துநர்களுக்கு வருகையின் அடிப்படையில் ஒரு வருடத்திற்கு 108 நாட்களுக்கு மிகா மல் மதிப்பூதியம் அடிப்படையில் ஒரு வருகைக்கு போக்கு வரத்து செலவு உட்பட ரூ.1000 மட்டும் வழங்கப்படும் (அதிக பட்சமாக ஒரு நபருக்கு மாதம் 9 அமர்வுகள் மட்டும்). விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பங்களை திருச்சி ராப்பள்ளி மாவட்ட https://tiruchirappalli.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கண்காணிப்பாளர், அன்னை சத்யா அம்மையார் அரசு குழந்தைகள் இல்லம், ஆவூர் ரோடு, மாத்தூர், திருச்சி– 622515 என்ற முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 22.12.2025 மாலை 5 மணிக்குள் வந்த சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும். மேற்கூறிய காலவரையறைக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் விபரங்களுக்கு 04339-250074, 6369104191 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள லாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்து உள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%