செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஆலவயல் கிராமத்தில் மழை பெய்திட,விவசாயம் செலுத்திட வேண்டி ஆடி வெள்ளி சிறப்பு படையல்
Jul 18 2025
155
ஜுலை.19
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் ஆலங்கண்மாய் அருகே உள்ள அருள்மிகு பிடாரி அம்பாள் சுவாமிக்கு ஆலவயல் பூதன்கூட்டம் வகையறாக்கள் சார்பில் மழை பெய்திட, விவசாயம் செலுத்திட,நாடு வளம் பெற வேண்டி ஆடி முதல் வெள்ளி சிறப்பு படையல் விழா நடத்தினர். இந்த படையல் விழாவில் பொங்கல் வைக்கப்பட்டு வாழைப்பழம், தேங்காய், உள்ளிட்டவை அம்பாளுக்கு படைக்கப்பட்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%