இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி : ஆஸ்திரேலியா அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி : ஆஸ்திரேலியா அபார வெற்றி



இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டிலும் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.


ஆஸ்திரேலியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவு மோதலாக (பிங்க் பந்து டெஸ்ட்) கடந்த 4-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 334 ரன்களும், ஆஸ்திரேலியா 511 ரன்களும் எடுத்தன. 177 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 3-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 134 ரன்களுடன் தத்தளித்தது. ேகப்டன் பென் ஸ்டோக்ஸ் (4 ரன்), வில் ஜாக்ஸ் (4 ரன்) களத்தில் இருந்தனர்.


இந்த நிலையில் 4-வது நாளான நேற்று இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 75.2 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் மைக்கேல் நேசர் 5 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலன்ட் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.


பின்னர் 65 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 10 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக டிராவிஸ் ஹெட் 22 ரன்களிலும், மார்னஸ் லபுஸ்சேன் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.


இதுவரை 15 பகல்-இரவு டெஸ்டில் விளையாடியுள்ள ஆஸ்திரேலியா அதில் 14-ல் வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 2–-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் வருகிற 17-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%