" ரவியும் ரமணியும் நண்பர்கள் ஒரே கல்லூரியில் ஒரே பாடப் பிரிவில் படிக்கும் நண்பர்கள் .
அவர்கள் இருவரையும் இணைக்கும் பாலம் செல்போன் மட்டும் தான்.
செல்போன் மூலம் பகிர்தல் பேசுதல் ஃபேஸ்புக் இணைப்பு என்று காலம் நகர்ந்தது .
இருவரும் கல்லூரி படிப்பை முடித்து பிரியா விடை பெற்றனர் . அப்போது அவர்கள் இருவரும் தங்கள் வீட்டு விலாசத்தை பகிர்ந்து கொண்டனர்.
ஒரு ரவி ரமணியின் வீட்டிற்கு வந்தான் மாட மாளிகை போன்ற வீடு . ரமணி ரவியை அழைத்து உபசரித்து பேசி மகிழ்ந்து வீட்டில் அனைவருக்கும் அறிமுகப்படுத்தி உணவு அளித்து ரவியை அவன் வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.
ரமணி சொந்தமாக கம்பெனி அவன் அப்பா வைத்துத்தர அதை நிர்வகித்து வந்தான்.
சில மாதங்கள் கழித்து ரமணி ரவி வீட்டிற்கு சென்றான் . ஓலைக் குடிசை அதில் ரவியின் குடும்பம் வாழ்ந்தது , ரவி எதோ ஒரு கம்பெனியில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்தான்.
ரமணியை அழைத்து நன்கு உபசரித்து நலம் விசாரித்து மனம் விட்டு பேசி மகிழ்ந்து பிறகு பிரியா விடையோடு வீடு திரும்பினான் ரமணி .
சில நாட்களுக்கு பிறகு ரவிக்கு ஒரு பிரபல கம்பெனியின் மூலம் இண்டர்வியூவுக்கு அழைப்பு வந்தது .
ரவி அந்த கம்பெனியில் செலக்ட் ஆகி கைநிறை சம்பளத்தோடு வேலையில் அமர்ந்தான்.
உடன் ரமணிக்கு தகவலை செல்போன் மூலம் தெரிவித்தான் ரவி .
மகிழ்ந்து போன ரமணி அந்த கம்பெனியின் எம்.டி நான் தான் என்றும் நான் தான் வேலைக்கு உன்னை அமர்த்தி என்னுடன் நீ இருக்க வேண்டும் என்று அழகு பார்த்தேன் என்றான் ரமணி அடக்கமாக .
மகிழ்ந்து நெகிழ்ந்த நண்பன் ரவி இணைய தள தொடர்பு தான் என்னை உயரம் உயர்த்தி என் வாழ்க்கையை ஜொலிக்க வைத்தது என்று தன் செல்போனுக்கு முத்தமிட்டு மகிழ்ந்தான் ..."
பணக்காரனையும் ஏழையையும் சமன்படுத்தி பார்க்கக் கூட இணைய தள தொடர்பு பயன்படுகிறது ...."
சீர்காழி. ஆர். சீதாராமன்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?