இண்டிகோ விமானம் ரத்து: மகனின் தேர்வுக்காக 800 கி.மீ., கார் ஓட்டிய தந்தை
Dec 14 2025
12
குருகிராம் : இண்டிகோ விமான சேவை பாதிப்பால், மகன் தனது முக்கிய தேர்வை தவறவிடக்கூடாது என்பதற்காக, ஹரியானாவைச் சேர்ந்த தந்தை ஒருவர், 800 கிலோமீட்டர் கார் ஓட்டி, பயணம் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஹரியானா மாநிலம் ரோதக் மாவட்டத்தில் வசித்து வருபவர் ராஜ்நாத் பங்கல். தன் மகனை டில்லியில், டிசம்பர் 8ம் தேதி நடந்த தேர்வுக்கு அழைத்துச் செல்ல, 6ம் தேதி மாலை, இந்தூர் - டில்லி இண்டிகோ விமான டிக்கெட்டை முன்பதிவு செய்திருந்தார். கடந்த வாரம் முழுவதும் இண்டிகோ விமானத்தில் சேவை குறைபாடு ஏற்பட்ட நிலையில், முதலில் அவரது விமானம் தாமதம் என அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. மாற்று விமான பயணமும் ஏற்பாடு செய்யப்படவில்லை. ரயிலில் செல்ல முயற்சித்தும் முடியவில்லை.
இதனால் மிகுந்த பதட்டம் அடைந்த அந்த தந்தை, மகன் கண்டிப்பாக தேர்வு எழுத வேண்டுமென நினைத்து, தானே கார் ஓட்டிச் செல்ல முடிவு செய்தார்.
இதையடுத்து, ஹரியானாவில் இருந்து டில்லி வரை, சுமார் 800 கிலோ மீட்டர் தூரத்தை, 19 மணி நேரம் இடைவிடாமல் ஓட்டி சென்றார். பல பிரச்னைகளைக் கடந்து தேர்வு நேரத்துக்கு சில மணி நேரம் முன்பாகவே பாதுகாப்பாக சென்றடைந்தார். மகனும் தேர்வை வெற்றிகரமாக எழுதினார்.
இதுகுறித்து தந்தை கூறுகையில், 'விமானம் ரத்தான போது மகனின் எதிர்காலம் தான் எனக்கு மிகப்பெரியதாக தெரிந்தது. அது கையில் இருந்து நழுவி செல்லக்கூடாது என்பதற்காக இந்த பயணத்தை முடிவு செய்தேன்' என்றார்.
அவரது இந்த அர்ப்பணிப்பு சமூக வலைதளங்களில் வைரலாக பரவ, பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?