இந்தியாவுக்கு 5% தள்ளுபடியில் கச்சா எண்ணை வினியோகம் தொடரும்: ரஷ்யா அறிவிப்பு

இந்தியாவுக்கு 5% தள்ளுபடியில் கச்சா எண்ணை வினியோகம் தொடரும்: ரஷ்யா அறிவிப்பு

மாஸ்கோ, ஆக. 21–


அரசியல் அழுத்தங்கள் இருந்தாலும் இந்தியாவுக்கு 5% தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விநியோகம் தொடரும் என ரஷ்யா அறிவித்துள்ளது.


ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலமாக ரஷ்யா – உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக நிதியளிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதனால் இந்தியா மீது அமெரிக்கா கடுமையாக வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பினால் இந்தியா பின்வாங்காது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.


இந்த நிலையில் இந்தியாவிற்கான ரஷ்யாவின் துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி கிரிவா கூறுகையில், அமெரிக்காவிடம் இருந்து பல்வேறு அழுத்தங்கள், தடைகள் இருந்தபோதிலும் பேச்சுவார்த்தையின்படி இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் 5% தள்ளுபடியில் தொடரும். அரசியல் அழுத்தங்கள் இருந்தபோதிலும் ரஷ்யாவில் இருந்து அதே அளவிலான கச்சா எண்ணை இந்தியா இறக்குமதி செய்யும். தள்ளுபடி என்பது இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் உள்ள வணிக ரகசியம். அது அவ்வப்போது மாற்றம் செய்யப்படும். வழக்கமாக 5% அதிகமாக அல்லது 5% குறைவாக இருக்கும் என்றார்.


ரஷ்ய தூதரக துணைத் தலைவர் ரோமன் பாபுஷ்கின் கூறுகையில், அமெரிக்காவின் வரிவிதிப்பு இந்தியாவுக்கு ஒரு சவாலான சூழ்நிலை என்றாலும் இரு நாட்டு உறவுகளில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.


வெளிப்புற அழுத்தம் இருந்தபோதிலும் இந்தியா–ரஷ்யா எரிசக்தி ஒத்துழைப்பு தொடரும் என்று நாங்கள் நம்புகிறோம்' என்று தெரிவித்தார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%