
இந்தியா-பாகிஸ்தான்போரை நான் தான் நிறுத்தினேன் என டிரம்ப் திரும்ப திரும்ப சொல்லி வருகிறார்.
பாகிஸ்தானுடன் அமெரிக்கா தற்போது நெருக்கம் காட்டி வருகிறது.
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து 2 நாடுகளுக்கும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து 2 நாடுகளும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது.
ஆனால் இந்த போரை நான் தான் நிறுத்தினேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் திரும்ப திரும்ப சொல்லி வருகிறார். இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது.மேலும் பாகிஸ்தானுடன் அமெரிக்கா தற்போது நெருக்கம் காட்டி வருகிறது.
இந்த நிலையில் போருக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நிலைமையை கண்காணித்து வருவதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்கே ரூபியோ தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு இரு நாடுகளில் நிலைமையை நாள்தோறும் கண்காணித்து வருகிறோம்.
ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே என்ன நடக்கிறது? கம்போடியாவிற்கும், தாய்லாந்திற்கும் இடையே என்ன நடக்கிறது? என்பதை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.
உக்ரைனில் நடந்து வரும் போரை நிறுத்த அழைப்பு விடுத்துள்ளோம். போர் நடந்து கொண்டிருக்கும் போது பேச்சு வார்த்தை நடத்துவது கடினம்.
போர் நிறுத்தத்திற்கு ஒரே வழி இரு தரப்பிலும் ஒருவருக்கொருவர் துப்பாக்கி சூடு நடத்துவதை நிறுத்த ஒப்புக்கொள்வது தான். ரஷியா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. போரை தற்காலிமாக நிறுத்துவது மட்டுமல்லாது தற்போதைய மற்றும் எதிர்கால மோதல்களை தடுக்கும் ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்படுவது நோக்கமாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?