இந்தோனேஷியாவில் கப்பலில் தீ: கடலில் குதித்து உயிர் தப்பிய பயணிகள்

இந்தோனேஷியாவில் கப்பலில் தீ: கடலில் குதித்து உயிர் தப்பிய பயணிகள்

பாலி,


இந்தோனேசியாவில் 280 பேருடன் சொகுசு கப்பல் ஒன்று வடக்கு சுலவேசியில் உள்ள தலாவுத் தீவில் இருந்து மனாடோ நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. தீ கப்பலின் மற்றப் பகுதிகளுக்கு மளமளவெனப் பரவி கப்பல் முழுவதுமாக தீபற்றி எரியத் தொடங்கியது.


தீயை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் தப்பிக்க உடனடியாக கடலில் குதித்தனர். அவர்களில் பெரும்பாலானோர் லைப் ஜாக்கெட் அணிந்திருந்தனர். ஆனால் சில பயணிகள் லைப் ஜாக்கெட் இல்லாமல் கடலில் குதித்தனர். அருகிலுள்ள டெல்லிஸ் தீவைக் கடந்து செல்லும் பல மீன்பிடி படகுகள் சில உயிர் பிழைத்த பயணிகளை தண்ணீரிலிருந்து மீட்டு தங்கள் படகுகளில் கரைக்கு கொண்டு வந்தன. இதனையடுத்து கடலில் குதித்த பயணிகளை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இந்த தீ விபத்தில் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறதா? என்பது குறித்தான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. எனவே இந்த மீட்புப் பணிகள் முற்றிலுமாக முடிந்த பிறகே இந்த தீ விபத்தில் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளனவா? எனத் தெரியவரும் என கூறப்பட்டுள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%