இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு ஜாமீன் வழங்கியது கோர்ட்டு
Aug 28 2025
15

கொழும்பு,
இலங்கையில் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே. இவர் அதிபராக இருந்த போது தனிப்பட்ட விஷயங்களுக்காக லண்டன் பயணம் மேற்கொண்டிருந்தார். அதாவது, லண்டனில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றின் பட்டமளிப்பு விழாவில் தனது மனைவிக்காக கலந்து கொண்டார். இந்த சம்பவம் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்தது.
தனிப்பட்ட பயணத்திற்காக அரசின் நிதியை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. லண்டன் பயணத்தின் போது ரணில் உடன் 10 பேர் சென்றதாக தெரிகிறது. இந்த பயணத்திற்கு மொத்தம் 17 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் லண்டன் பயணத்திற்கான செலவை தனது மனைவிதான் முழுமையாக ஏற்றுக் கொண்டார் என்றும், தன் மீதான குற்றச்சாட்டுகள் அவதூறு பரப்பும் வகையில் அமைந்திருக்கின்றன என்றும் ரணில் விக்கிரமசிங்கே கூறியிருந்தார்.
இந்நிலையில் சிஐடி விசாரணைக்கான ரணில் விக்கிரமசிங்கே நேரில் ஆஜராகுமாறு வழக்கறிஞர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து 22ஆம் தேதி காலை நேரில் ஆஜரானார். விசாரணை நடந்து முடிந்த நிலையில் அன்றைய தினமே ரணில் கைது செய்யப்பட்டார். அவரை 26ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க இலங்கை கோர்ட்டு உத்தரவிட்டது. சிறையில் ரணில் விக்கிரமசிங்கேவிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிந்த நிலையில், ஜாமீன் வழங்கி அந்நாட்டு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனால், ரணில் விக்கிரமசிங்கே ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?