இளம் வாசிப்பு மன்றம் தொடக்க விழா

இளம் வாசிப்பு மன்றம் தொடக்க விழா


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பக்கீர் தக்கா ஊராட்சி ஒன்றிய உருது தொடக்கப் பள்ளியில் புத்தக பிரியர்கள் தினம் முன்னிட்டு இளம் வாசிப்பு மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் எம்.ஒய்.அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார். ஆசிரியை சி.விஜய சாமுண்டீஸ்வரி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, வெண்குன்றம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் க.வாசு பங்கேற்று, இளம் வாசிப்பு மன்றத்தை தொடங்கி வைத்தார். மேலும் வாசிப்பின் அவசியம் குறித்து வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க துணை தலைவர் கவிஞர் பா.சீனிவாசன் சிறப்புரை ஆற்றினார். வாசிப்பதினால் அறிவு ஆற்றல் பெருகும் என்று சி.ம. புதூர் கிளை நூலகர் ஜா.தமீம் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வில் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%