இளையராஜாவின் பாடல் பயன்பாட்டிற்கு இடைக்கால தடை

இளையராஜாவின் பாடல்  பயன்பாட்டிற்கு இடைக்கால தடை

சென்னை:

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், அஜித் குமார், திரிஷா உள்பட பலர் நடித்து கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தனது அனுமதியின்றி பாடல் களைப் பயன்படுத்தியது பதிப்புரிமைச் சட்டத்திற்கு விரோத மானது என்றும், படத்தில் பாடல்களைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும், உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் இளையராஜா மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி என். செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. ‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜாவின் இசையில் ஏற்கனவே வெளியான திரைப்படத்தில் உள்ள மூன்று பாடல்களையும் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மனு குறித்துப் பட தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்ட வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்குத் தள்ளி வைக்கப் பட்டுள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%