
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தம் செய்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, சனிக்கிழமை அலாஸ்காவில் ரஷிய அதிபர் புதினை டிரம்ப் சந்தித்தார். இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தை இணக்கமான முறையில் நடைபெற்றதாக இரு நாட்டுத் தலைவர்களும் அறிவித்தனர். ஆனால் போர் நிறுத்தம் குறித்த முடிவு எதுவும் எட்டப்படவில்லை. போரை நிறுத்த புதின் பல நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்புக்குப் பிறகு, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் டிரம்ப் தொலைபேசியில் பேசினார்.
இந்நிலையில், NATO-வில் உக்ரைன் உறுப்பினராக முடியாது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பதிவில், "ரஷ்யா கைப்பற்றியுள்ள க்ரிமியா பகுதியை உக்ரைன் உரிமை கொண்டாடக் கூடாது. NATO-வில் உக்ரைன் உறுப்பினராக முடியாது" என்று தெரிவித்தார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நாளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?