உலகில் மனநோய் உள்ளவர்கள அதிகமுள்ள டாப் 10 நாடுகள் இதுதான்..இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா?

உலகில் மனநோய் உள்ளவர்கள அதிகமுள்ள டாப் 10 நாடுகள் இதுதான்..இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா?


மனநோய் மற்றும் மன அழுத்தம் என்பது உலகளாவிய பிரச்சினையாகும். மனச்சோர்வு பிரச்சினை உலகளவில் கோடிக்கணக்கான மக்களை உலகளவில் பாதித்துள்ளன. குறிப்பாக சுகாதார அமைப்புகள் பலவீனமாக உள்ள நாடுகளில், மனச்சோர்வுக்கு எதிரான போராட்டத்தில் போராடும் மக்களின் சரியான எண்ணிக்கையை தீர்மானிப்பது மிகவும் கடினமாகும்.


பதிவு செய்யப்பட்ட தரவுகளின்படி, சில நாடுகள் அதிக மனச்சோர்வு நோய் விகிதங்களைக் கொண்டிருக்கின்றன. பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் போன்ற காரணிகள் நாட்டு மக்களின் மனநல விளைவுகளுக்கு பங்களிக்கின்றன. மேலும் World Population Review அறிக்கையின்படி, உலகில் மிகவும் மனச்சோர்வடைந்த டாப் 10 நாடுகள் என்னென்ன மற்றும் இதில் இந்தியாவின் இடம் என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.


 கிரீன்லாந்து

இந்த பட்டியலில் கிரீன்லாந்து முதலிடத்தில் உள்ளது. இங்கு 1,00,000 பேரில் 7,979 பேர் மனசோர்வில் உள்ளனர். கிரீன்லாந்தில் அதிக மனச்சோர்வுக் கோளாறு விகிதம் உள்ளது, ஏனெனில் அதன் மோசமான காலநிலை, புவியியல் அமைப்பு மற்றும் மனநல சேவைகளுக்கான மோசமான அணுகல் இதற்கு காரணமாக உள்ளது. நீண்ட, இருண்ட குளிர்காலம் பருவகால பாதிப்புக் கோளாறு மற்றும் ஒட்டுமொத்தமாக அதிக மனச்சோர்வு விகிதங்களை ஏற்படுத்தும்.


கிரீஸ்

கடந்த சில தசாப்தங்களாக கிரீஸ் கடுமையான பொருளாதார சிக்கல்களைச் சந்தித்துள்ளது, இதில் நீண்டகால நிதி நெருக்கடியும் அடங்கும். இங்கு 1,00,000 பேரில் 7297 பேர் மனநோயில் உள்ளனர். கூடுதலாக, அதிக வேலையின்மை, சமூகத்தில் நிலவும் பதற்றம் மற்றும் பொருளாதார சிக்கல் ஆகியவை நாட்டில் மனநலப் பிரச்சினைகளை அதிகரித்துள்ளன.


துனிசியா

துனிசியாவில் 1,00,000 பேரில் 7265 பேர் மனநோயில் உள்ளனர். துனிசியா அரசியல்ரீதியாகவும், சமூகரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நீண்டகால பொருளாதாரப் போராட்டங்களும், மனநல வசதிகள் பற்றாக்குறையும் இங்கு மக்களிடையே மனச்சோர்வு விகிதங்களை அதிகரிப்பதற்குக் காரணமாக உள்ளன.



 போர்ச்சுகல்

ஒரு காலத்தில் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்திய போர்ச்சுகல் இப்போது மனஅழுத்த நோயுடன் போராடுகிறது. இங்கு 1,00,000 பேருக்கு 6,867 நபர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பாவிலேயே போர்ச்சுகல் மிக உயர்ந்த மனச்சோர்வுக் கோளாறு விகிதங்கள் இங்குதான் நிலவுகிறது. இங்கு நிலவும் வேலையின்மை, பொருளாதார பாதுகாப்பின்மை மற்றும் அதிக வயதான மக்கள் தொகை இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.


லிதுவேனியா

இங்கு 1,00,000 பேருக்கு 6,726 நபர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். லிதுவேனியாவில் அதிக தற்கொலை விகிதங்களும் அதிக குடியேற்றமும் உள்ளன, இதன் விளைவாக சமூகத்தில் பிரிவுகள் ஏற்படுகிறது மற்றும் சமூகத்தில் பொருளாதார நிச்சயமற்ற தன்மையைக் ஏற்படுகிறது, இது அதன் அதிக மனச்சோர்வு விகிதங்களுக்கு பங்களிக்கிறது.


லெசோதோ

லெசோதோ அதிக எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் வறுமையால் கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது. இந்த இரண்டு கொடூரமான சுகாதார மற்றும் பொருளாதார காரணிகளும் மக்களிடையே உள்ள மனநலப் பிரச்சினைகளை வெகுவாக அதிகரிக்கின்றன. இங்கு 1,00,000 பேருக்கு 6,631 மக்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


பாலஸ்தீனம்

தற்போது போர் வளையத்தில் சிக்கியிருக்கும் உலகின் மோசமான வாழ்க்கைத்தரம் உள்ள நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. பாலஸ்தீன மக்களின் மனநல நெருக்கடி மோதல், ஆக்கிரமிப்பு மற்றும் இடப்பெயர்ச்சி ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. நாள்பட்ட மன அழுத்தம் மற்றும் போர் பதற்றம் ஆகியவை மனச்சோர்வுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பாக உள்ளது. இங்கு 1,00,000 பேருக்கு 6,629 பேர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


லெபனான்

லெபனான் பொருளாதார சரிவு, அரசியல் ஸ்திரமின்மை மற்றும் பெய்ரூட்டில் நடந்த வான்வழித் தாக்குதல் என பல பிரச்சினைகளை தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது. இந்த நெருக்கடிகள் அதன் குடிமக்களின் மன நலனில் ஒரு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இங்கு 1,00,000 பேருக்கு 6,612 பேர் மனநோயால் அவதிப்படுகின்றனர்.


ஸ்பெயின்

ஸ்பெயினின் மக்கள் தொகையில் 1,00,000 பேரில் 6,347 பேர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார மந்தநிலை, வேலையின்மை மற்றும் சமூக சமத்துவமின்மை ஆகியவை ஸ்பெயினின் அதிக மனச்சோர்வு விகிதங்களுக்கு காரணமாக உள்ளன. ஸ்பெயினில் கடந்த சில ஆண்டுகளாக மனநல சேவைகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


பெலாரஸ்

பெலாரஸின் அரசியல் சூழல் மற்றும் மனநலப் பராமரிப்புக்கான வசதிகளின் குறைபாடு ஆகியவை இங்கு அதிகளவு மனச்சோர்வுக்கு பங்களித்துள்ளன. மனநோயாளிகளை சமூகம் அணுகும் விதம் பலர் சரியான சிகிச்சையைப் பெறுவதைத் தடுக்கிறது. இங்கு மக்கள் தொகையில் 1,00,000 பேரில் 6,322 பேர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்தியா எந்த நிலையில் உள்ளது?

மிகவும் மனச்சோர்வுள்ள மக்கள் கொண்ட டாப் 10 நாடுகளில் இந்தியா இடம்பெறவில்லை. World Population Review இந்தியாவின் மனச்சோர்வு கோளாறு விகிதம் 100,000 மக்கள்தொகைக்கு 4,418 என்று கூறுகிறது, இது பல வளர்ந்த நாடுகளை விட மிகக் குறைவு. இந்த விகிதம் குறைவாக இருந்தாலும், அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருப்பதால், இந்தியாவில் அதிகபட்சமாக 62 மில்லியனுக்கும் அதிகமானோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%