உலக பல்கலை. விளையாட்டு போட்டி: அங்கிதாவுக்கு வெள்ளிப் பதக்கம்

உலக பல்கலை. விளையாட்டு போட்டி: அங்கிதாவுக்கு வெள்ளிப் பதக்கம்

உலக பல்​கலைக்​கழக விளை​யாட்​டுப் போட்​டி​யின் 3 ஆயிரம் மீட்​டர் ஸ்டீபிள் சேஸ் பிரி​வில் இந்​திய வீராங்​கனை அங்​கிதா தியானி வெள்​ளிப் பதக்​கம் வென்​றார். உலக பல்​கலைக்​கழக விளை​யாட்​டுப் போட்​டிகள் ஜெர்​மனி​யின் எசென் உள்​ளிட்ட நகரங்​களில் நடை​பெற்று வரு​கின்​றன. கடைசி நாளான நேற்று மகளிருக்​கான 3 ஆயிரம் மீட்​டர் ஸ்டீபிள்​ சேஸ் போட்டி நடை​பெற்​றது. இதில் இந்​திய வீராங்​கனை அங்​கிதா பந்தய தூரத்தை 9:31.99 வினாடிகளில் கடந்து 2-வ​தாக வந்​தார். இதையடுத்து அவர் வெள்​ளிப்​ப​தக்​கம் வென்று அசத்​தி​னார். ஜெர்​மனி வீராங்​கனை அடியா புட்டே 9:33.34 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்​கம் வென்​றார். இந்​தப் பிரி​வில் பின்​லாந்​தின் இலோனா மரியா 9:31.86 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்​கப்​ ப​தக்​கத்​தைக் கைப்​பற்​றி​னார்.


ரோட்​டரி ஒலிம்​பி​யாட்: 1,500 மாணவர்​கள் பங்​கேற்பு: சென்னை ஜவஹர்​லால் நேரு மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற ரோட்​டரி ஒலிம்​பி​யாட் விளை​யாட்​டுப் போட்​டி​யில் 1,500க்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் பங்​கேற்​றனர். இந்​தப் போட்​டி​யில் 70க்​கும் மேற்​பட்ட பள்​ளி​களைச் சேர்ந்த 1,500க்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் கலந்​து​கொண்​டு, தங்​களது விளை​யாட்​டுத் திறனை வெளிப்​படுத்​தினர். நிகழ்ச்​சியை இந்​திய ராணுவத்​தின் லெப்​டினன்ட் (தெற்கு கமாண்ட்) கரன்​பீர் சிங் பிரார் தொடங்கி வைத்​தார். சென்னை ரோட்​டரி சர்​வ​தேச மாவட்​டம்​-3234 சார்​பில் நடத்​தப்​பட்ட இந்த ரோட்​டரி ஒலிம்​பி​யாட் விளை​யாட்​டுப் போட்​டி​யில் பல்​வேறு விளை​யாட்​டு​கள் இடம்​பெற்​றன. சென்னை ஜவஹர்​லால் நேரு மைதானத்​தில் நிறைவடைந்த இப்​போட்​டி​யில் வெற்றி பெற்​றவர்​களுக்கு பரிசுகள், சான்​றிதழ்​கள் வழங்​கப்​பட்​டன.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%