உளுந்தூர்பேட்டையில் மகாலட்சுமி பல்நோக்கு மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மகாலட்சுமி பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மகா கருத்தரிப்பு மைய நிறுவனர் டாக்டர் எழிலரசி கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த முகாமில் சட்டமன்ற உறுப்பினர் ஏஜே மணிக்கண்ணன் அவர்கள் தலைமையேற்று குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு துணைத் தலைவர் வைத்தியநாதன் திமுக திட்ட குழு உறுப்பினர் டேனியல் ராஜ் நகர்மன்ற உறுப்பினர்கள் மனோபாலன் முருகவேல் அபிராமி மோகன் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர் மேலும் முகாமில் பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்கள் முகாமில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினார்கள்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?