உளுந்தூர்பேட்டை அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலில் உள்ள முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா

உளுந்தூர்பேட்டை அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலில் உள்ள முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா

*உளுந்தூர்பேட்டை அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலில் உள்ள முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நடந்து முடிந்த நிலையில் நேற்று இரவு வள்ளி தெய்வானை சமேத முருகன் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்....*


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள கைலாசநாதர் திருக்கோவிலில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு தனி கோவில் உள்ளது கடந்த ஆறு நாட்களாக கந்த சஷ்டி விழா நடைபெற்று வந்த நிலையில் தினசரி முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதைத்தொடர்ந்து நேற்று இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது அப்பொழுது வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று திருக்கல்யாணம் செய்யப்பட்டது இதில் உளுந்தூர்பேட்டை மட்டும் இன்றி அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட முருக பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பி முருகப்பெருமானை வழிபட்டனர்..

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%