எனக்கு புதிய பதவி தந்தால் வேலை செய்வேன்..! *அண்ணாமலை சொல்கிறார்

எனக்கு புதிய பதவி தந்தால் வேலை செய்வேன்..!  *அண்ணாமலை சொல்கிறார்


சென்னை, ஜூலை 29-

 எனக்கு புதிய பதவி தந்து வேலை செய்ய சொன்னால் நான் செய்​வேன் என்று தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை கூறினார்.

  சென்னை விமான நிலை​யத்​தில் செய்தியாளர்​களிடம் அண்​ணா​மலை கூறிய​தாவது: கங்கை கொண்ட சோழபுரம் என்ற சிறிய ஊரின் தலை​யெழுத்​தை, பிரதமரின் வருகை நிச்​சய​மாக மாற்​றும். பிரதமரின் வரு​கைக்கு பிறகு நிறைய சுற்​றுலா பயணி​கள், ஆன்​மிக​வா​தி​கள் ஏராளமானோர் வருகை தரு​வார்​கள். 

பிரதமரை சந்​திப்ப​தற்​காக ஓ.பன்​னீர்​செல்​வம் அனு​மதி கேட்​டிருந்​தாரா என்​பது எனக்கு தெரி​யாது. 

  தமிழகத்​தில் மாநில பொறுப்​பாளர்​கள் இன்​னும் முழு​மை​யாக தேர்வு செய்​யப்​பட​வில்​லை. அகில இந்​திய அளவில் மாநில தலை​வர்​கள் மட்​டும்​தான் நியமிக்​கப்​பட்​டிருக்​கின்​றனர். இன்​னும் நிறைய வேலைகள் இருக்​கின்றன. நாங்​கள் அனை​வரும் சாதாரண தொண்​டர்​கள். பொறுப்பு கிடைத்​தா​லும், கிடைக்​க​வில்லை என்​றாலும், எப்​போதும் போல தான் வேலை செய்​வோம்.

புதிய பதவி

பொறுப்பு என்​பது நிலை​யில்​லாதது. மாறிக்​கொண்டே இருக்​கும். பொறுப்​புக்​காக எங்​கள் வேலையை குறைத்​துக் கொண்​டோம், வேலை செய்ய மாட்​டோம் என்ற பேச்​சுக்கே இடமில்​லை. கட்சி எனக்கு இன்​னொரு பொறுப்பு கொடுத்து வேலை செய்ய சொன்னால் நான் செய்​வேன். அது ஒரு வாரம், 15 நாட்​கள் அல்​லது ஒரு மாதம் கழித்தா என்​பது எனக்கு தெரி​யாது. 

திமுக ஆட்சி வந்து 4 ஆண்​டு​கள் முடிவடைந்து விட்​டன. இந்த காலத்​தில் தமிழகத்​துக்கு என்ன செய்​தார்​கள் என்ற ரிப்போர்ட்கார்டை மக்​களிடம் முதல்​வர் கொடுக்க வேண்​டும்.

இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%