எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர போலி சான்றிதழ் அளித்த 20 பேருக்கு 3 ஆண்டு தடை

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர போலி சான்றிதழ் அளித்த 20 பேருக்கு 3 ஆண்டு தடை

சென்னை:

எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்கு போலி சான்​றிதழ் மூலம் விண்​ணப்​பித்த 20 மாணவர்​கள் 3 ஆண்​டு​ கலந்​தாய்​வில் பங்கேற்க தடை விதிக்​கப்​பட்​டது. சென்னை சைதாப்​பேட்டையில் ஆண்​கள் மேல்​நிலைப் பள்​ளி​யில் ரூ.5.25 கோடி​யில் நவீன கலையரங்​கம், ரெட்​டிக்​குப்​பம் சாலை, கோடம்​பாக்​கம் சாலை​யில் ரூ.3.55 கோடி​யில் மழைநீர் கால்​வாய், திடீர் நகரில் ரூ.61 லட்​சத்​தில் கழி​வுநீர் கால்​வாய் கட்​டு​மான பணி​களை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் நேற்று தொடங்கி வைத்​தார்.


அப்​போது, செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தமிழகத்​தில் எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்கு கடந்த ஜூன் 6 முதல் ஜூன் 29-ம் தேதி வரை ஆன்​லைனில் 72,743 விண்​ணப்​பங்​கள் பெறப்​பட்​டன. உரிய சான்​றிதழ்​களை இணைக்க 2 நாட்​கள் அவகாசம் வழங்​கப்​பட்​டது.


இதை தொடர்ந்​து, தகு​தி​ யானவர்​களின் தரவரிசை பட்​டியலை சரி​பார்க்​கும்​போது, 20 பேரின் விண்​ணப்​பங்​களில் போலி சான்​கள் இருப்​பது கண்​டறியப்​பட்​டது. 7 பேர் பிறப்​பிட சான்​றிதழை​யும், 9 பேர் பிறப்​பிட, சாதி சான்​றிதழை​யும், 4 பேர் என்​ஆர்ஐ தகு​திக்​கான தூதரக சான்​றிதழை​யும் போலி​யாக கொடுத்​துள்​ளனர்.


எனவே, 20 மாணவர்​களும் தகுதி நீக்​கம் செய்​யப்​பட்​டு 3 ஆண்டு​களுக்கு கலந்​தாய்வில் பங்​கேற்க தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. அவர்கள் மீது மீது சட்ட ரீதி​யான நடவடிக்​ கைகளும் எடுக்​கப்பட உள்​ளன. விண்​ணப்​பங்​கள் பரிசீலனை செய்​யும் பணி முடிந்​து, தகு​தி​யான மாணவ, மாணவி​களின் தரவரிசை பட்​டியல் ஜூலை 25-ம் தேதி காலை 10 மணிக்கு வெளி​யிடப்​படும். அதன்​பிறகு, மத்திய அரசின் கால அட்​ட​வணைப்​படி, எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்​கான முதல்​கட்ட கலந்​தாய்வு 30-ம்​ தேதி தொடங்​கும்​. இவ்வாறு அவர்​ கூறி​னார்​.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%