
எம்.எட். மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாட்டில் எம்.எட். பாடப்பிரிவுகள் கொண்டுள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 300 இடங்கள் உள்ளன. இவ்விடங்களுக்கு 2025-26ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆக. 11 முதல் தொடங்கப்பட்டது.
மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவினை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி விண்ணப்பப் பதிவு இன்றுடன் முடிவடைகிறது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தரவரிசையின் படி ஆக. 26 முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும்.
இதன் விவரம் எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் மூலம் மாணவர்களுக்கு அனுப்பப்படும். முதலாம் ஆண்டு வகுப்புகள் செப். 1 அன்று முதல் தொடங்கும்.
எம்.எட். சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல்வரின் அறிவுறுத்தலுக்கிணங்க ஆக. 21 முதல் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக தொடர்ந்து விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் செப். 15 வரை மாணவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?