ஐரோப்பாவில் வெப்ப அலை : பத்து நாட்களில் 2,300 பேர் பலி

ஐரோப்பாவில் வெப்ப அலை : பத்து நாட்களில் 2,300 பேர் பலி

பிரஸல்ஸ்,ஜூலை 18-

ஐரோப்பிய நாடுகளில் இந்த ஆண்டு முன்ன தாகவே வெப்ப அலைகள் வீசத் துவங்கி விட்டது. ஜூன் மாதத்தின் பிற்பகுதியிலிருந்து ஜூலை மாதத் தின் இரண்டாம் வாரம் வரை வெப்பநிலை சுமார் 46 டிகிரி செல்சியஸ் (114 டிகிரி ஃபாரன்ஹீட்) வரை அதிகரித்துள்ளது. இது ஐரோப்பாவில் வீசிய மூன் றாவது மிக மோசமான வெப்ப அலையாகும். முதல் வெப்ப அலை ஜூன் 17 - 22 க்கு இடை யில் வீசியது. இது மேற்கு மற்றும் தெற்கு ஐரோப் பாவை மிகக் கடுமையாகப் பாதித்தது. இரண்டா வது வெப்ப அலை ஜூன் 30 - ஜூலை 2 க்கு இடை யில் வீசியது. இதனால் பல ஐரோப்பிய நாடுக ளில் 40 டிகிரி முதல் 46 டிகிரி வரை வெப்பநிலை எட்டியுள்ளது. இம்பீரியல் கல்லூரி லண்டன் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடி சின் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின்படி, ஜூன் 23 முதல் ஜூலை 2 வரை பத்து நாட்களில் 12 ஐரோப் பிய நகரங்களில் சுமார் 2,300 பேர் வெப்பம் தொ டர்பான காரணத்தால் பலியாகியுள்ளனர். இதில் சுமார் 1,500 பேர் நேரடி காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய காரணத்தால் பலியாகியுள்ளனர் என தெரிவித்துள்ளனர். ஸ்பெயினின் சுற்றுச்சூழல் அமைச்சகம், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் அதிக வெப்பத் தின் காரணமாக சுமார் 1,180 பேர் உயிரிழந்துள்ள னர் என்று தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது மிக அதிகமாகும். காலநிலை மாற்றத்தின் தாக்கம் ஒவ்வொரு நாட்டிலும் தீவிரமாக அதிகரித்து வருகிறது. இது பூமியின் நிலைமையை மிகவும் ஆபத்தானதாக மாற்றுகிறது என்று இம்பீரியல் கல்லூரி பேராசிரி யர் டாக்டர் பென் கிளார்க் தெரிவித்துள்ளார். வெப்ப அலைகள் வழக்கமாக ஜூலை மாத பிற் பகுதியிலும் ஆகஸ்ட் மாதத்திலும்தான் நிகழும். ஆனால் சமீப ஆண்டுகாலமாக காலநிலை மாற்றத் த்தின் காரணமாக ஜூன் மாதமே உருவாகிறது. இது மிகவும் ஆபத்தான மாற்றம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த வெப்ப அலைகளால் வயதானவர்கள் அதிகமான பாதிப்பை அடைகிறார்கள். வெப்ப அலைக்கு பலியானவர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம் எர்த் சிஸ்டம் சயின்ஸ் டேட்டா என்ற இதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் 2015 முதல் 2024 வரை வெப்பமயமாதல் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் 0.27 டிகிரி செல்சியஸ் என்ற விகி தத்தில் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. இச்சூழலில் முதலாளித்துவத்தின் லாப வெறியின் காரணமாக உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றம், பூமிக்கு மிகப்பெரிய ஆபத்தை தற்போது உருவாக்கி வருகிறது என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%