ஞாயிற்றுக்கிழமைகளில் தாமரை மலர் கொண்டு இறைவனை வழிபட இல்லத்தில் ஒற்றுமை நிலவி மகிழ்ச்சி ஏற்படும். திங்கட்கிழமைகளில் முல்லை, மல்லிகை மலர் கொண்டு இறைவனுக்குப் பூஜை செய்தால் இல்லறத்தில் பகை, மனஸ்தாபங்கள் விலகும். செவ்வாய்க்கிழமைகளில் அரளி, சம்பங்கி, கஸ்தூரி போன்ற மலர் கொண்டு அம்மனை பெண்கள் அர்ச்சித்தால் கணவன்மார்கள் அகால விபத்தில் சிக்குதலில் இருந்து காப்பாற்றலாம். மனதில் குழப்ப நிலைகள் நீங்கி அமைதி காணலாம். புதன்கிழமைகளில் பாரிஜாத மலர்கொண்டு (இரவு மல்லி) இறைவனை வழிபட்டு வர குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகம் வளர்ச்சியடையும். வியாழக்கிழமைகளில் சாமந்தி மலரை இறைவனுக்கு அர்ப்பணித்து வழிபட செய்தொழில் சிறப்படைந்து, வியாபாரத்தில் மேன்மையடையலாம். வெள்ளிக்கிழமைகளில் பிச்சிப்பூ வைத்து இறைவனை வழிபட்டால் குழந்தைகளுக்கு ஏற்பட்ட கோளாறுகள், வியாதிகள் நீங்கி நலமடைவார்கள். அது மட்டுமல்லாமல் பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரித்து கணவர்கள் ஆரோக்கிய நிலையைக் காண்பார்கள். சனிக்கிழமைகளில் மனோரஞ்சிதம் மலர் கொண்டு இறைவனை வழிபட மனதில் ஏற்படும் உளைச்சல்கள் அகன்று மன அமைதி காணலாம். வாரத்தின் எல்லா நாட்களிலும் மல்லிகை மலர் கொண்டு வழிபட வாழ்வின் எல்லா நிலையிலும் சுபிட்சம் காண்பார்கள். பூஜைக்கு பயன்படுத்துகின்ற மலர்களை கிள்ளி பூஜிப்பது கூடாது. ஒரே தெய்வத்திற்கு பல பூக்களை கொண்டு பூஜிக்கலாம். எல்லாப் பூக்களையும் இதழ்களை உதிர்த்து கலவையாக்கி அர்ச்சனை செய்வது, பூஜை செய்வது, நல்லதல்ல.

அனுப்புதல்:
ப கோபிபச்சமுத்து,
பாரதியார் நகர்,
கிருஷ்ணகிரி - 1
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?