கடன் தொல்லையால் மனைவி, மகன்களை கொன்று தொழிலதிபர் தற்கொலை

கடன் தொல்லையால் மனைவி, மகன்களை கொன்று தொழிலதிபர் தற்கொலை



சென்னை: சென்​னை, கிழக்கு கடற்​கரை சாலை​யில் உள்ள ஈஞ்​சம்​பாக்​கத்தில் வசித்​தவர் சிரஞ்​சீவி தாமோதர குப்தா (56). சென்னை அண்ணா சாலை​யில், எலக்ட்​ரானிக்ஸ் பொருட்கள் மொத்த விற்​பனை கடை வைத்​திருந்​தார். இவருக்கு ரேவதி (45) என்ற மனை​வி​யும், ரித்விக் ஹர்​ஷத் (15), தித்விக் ஹர்​ஷத் (11) ஆகிய இரு மகன்​களும் இருந்​தனர்.


குப்​தாவிடம் கடனுக்கு எலக்ட்​ரானிக்ஸ் பொருட்​களை வாங்​கிய​வர்​கள் பணத்தை கொடுக்​காமல் காலம் தாழ்த்தி வந்​துள்​ளனர். இதனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடன் கொடுத்​தவர்​கள் நெருக்​கடி கொடுத்​த​தால், குப்தா வேதனை​யில் இருந்​துள்​ளார். இந்​நிலை​யில், நேற்று சேலத்​தில் உள்ள தனது மாமா முரளி​யின் வங்கி கணக்​குக்கு ரூ.1 லட்​சம் அனுப்பி வைத்​துள்​ளார்.


இதையடுத்​து, முரளி போனில் அழைத்த போது, குப்தா அழைப்பை ஏற்​க​வில்​லை. இதனால், சந்​தேகம் அடைந்த முரளி சாலிகி​ராமத்​தில் வசிக்​கும் குப்​தா​வின் மனைவி ரேவ​தி​யின் தம்பி சாய்கிருஷ்ணா​விடம் தகவல் தெரி​வித்​து, நேரடி​யாக சென்று பார்க்​கும்​படி அறி​வுறுத்தி உள்​ளார். இதையடுத்​து, சாய் கிருஷ்ணா ஈஞ்​சம்​பாக்​கம் சென்று பார்த்த போது கதவு திறந்​திருந்​தது.


உள்ளே சஞ்​சீவி கழுத்து அறுக்​கப்​பட்ட நிலை​யில் குளியலறை​யில் இறந்து கிடந்​தார். மனைவி ரேவ​தி, மகன்​கள் ரித்விக், தித்விக் ஆகிய 3 பேரும் கழுத்​தில் பாலித்​தீன் கவர் மூடிய நிலை​யில் இறந்து கிடந்​தனர். இது தொடர்​பாக, நீலாங்​கரை போலீ​ஸாருக்கு சாய் கிருஷ்ணா தகவல் தெரி​வித்​தார்.


போலீ​ஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கடன் தொல்​லை​யால் தற்​கொலை செய்து கொள்​கிறோம் என குப்தா எழுதிய கடிதம் வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. மேலும் மனை​வி, 2 மகன்​களை கொன்று விட்டு குப்தா தற்​கொலை செய்து கொண்​ட​தாக விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%