கம்சாத்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் நிலநடுக்கத்துக்கு பிறகு ரஷ்யா, ஜப்பான் கடற்கரையை தாக்கிய சுனாமி

கம்சாத்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் நிலநடுக்கத்துக்கு பிறகு ரஷ்யா, ஜப்பான் கடற்கரையை தாக்கிய சுனாமி

டோக்கியா:

ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தில் நேற்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 8.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் கம்சாத்கா தீபகற்பத்தில் கட்டிடங்கள் குலுங்கின. ஜப்பானின் ஹொக்கைடோ தீவிலிருந்து 250 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், வரலாற்றில் பதிவான 10 மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்று என அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.


இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து கிழக்கு ரஷ்யா மற்றும் ஜப்பானின் கடலோரப் பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கின. இது தொடர்பான காட்சிகள் நேற்று சமூக வலைதளங்களில் பரவின. ரஷ்யாவின் சகலின் பகுதியில் உள்ள குரில் தீவுகளில் பெருமளவு கடல்நீர் உட்புகுந்ததில் கட்டிடங்கள் நீரில் மூழ்கின. ஜப்பானின் பெரிய வடக்கு தீவான ஹொக்கைடோவில் துறைமுகங்கள் சேதம் அடைந்தன. இங்கு 4 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கின.


முன்னதாக, ஜப்​பானின் வடக்கு மற்​றும் கிழக்கு கடலோரப் பகு​தி​களில் 3 மீட்​டர் உயரம் வரை சுனாமி அலைகள் எழக்​கூடும் என அரசு எச்​சரிக்கை விடுத்​தது. இதனால் ஜப்​பானில் கடலோரப் பகு​தி​களில் வசிக்​கும் மக்​கள் பாது​காப்​பான இடங்​களுக்கு மாற்​றப்​பட்​டனர். இது​போல் ரஷ்ய கடலோரப் பகு​தி​களில் இருந்தும் மக்​கள் வெளி​யேற்​றப்​பட்​டனர். இதனால் உயி​ரிழப்பு தவிர்க்​கப்​பட்​டுள்​ளது.


குரில் தீவு​களை சுனாமி தாக்​கியதை தொடர்ந்து வடக்கு குரில் மாவட்​டத்​தில் அதி​காரி​கள் நேற்று அவசரநிலை பிரகடனம் செய்​தனர். வடக்கு பசிபிக் பிராந்​தி​யத்தை நேற்று சுனாமி அலைகள் தாக்​கியதை தொடர்ந்து சீனா முதல் தெற்கு நியூசிலாந்து வரை கடலோரப் பகு​தி​களுக்கு சுனாமி எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டது.


அமெரிக்​கா​வில் ஹவாலி தீவில் இருக்​கும் மக்​கள் பாது​காப்​புடன் இருக்​கும்​படி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கேட்டுக்கொண்டார். மேலும் ஓரி​கான் எல்லை முதல் வடக்கு கலி​போர்​னியா வரை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்​ சுனாமி எச்​சரிக்​கைவிடுத்​தது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%