கல்லூரி மாணவிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு: கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா வழங்கினார்

கல்லூரி மாணவிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு: கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா வழங்கினார்

கடலூர், ஆக. 8–


கல்லூரி மாணவர்களிடையே இரத்த சோகையினை கண்டறிந்து குணப்படுத்தும் நோக்கில் "இரத்த சோகையில்லா கடலூர்" என்ற சிறப்பு திட்டத்தினை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் கடலூர், பெரியார் கலைக் கல்லூரியில் தொடங்கி வைத்து, மாணவிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்புகளை வழங்கினார்.


இரத்த சோகை குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலெக்டர் தலைமையில் அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.


அப்போது அவர் கூறியதாவது:


கடலூர் மாவட்டத்தில் வளரிளம் பருவத்திலுள்ள மாணவிகளில் இரத்தசோகையினை தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி கண்டறியப்பட்டது. மேலும், வளரிளம் பருவத்தில் இரத்தசோகை இருப்பதினால் மாணவிகளின் கல்வி கற்கும் திறன் பாதிக்கப்படுவதாலும், மேலும், இவர்கள் வருங்காலத்தில் திருமணத்திற்கு பின் கருவுற்றால் அவருக்கும், பிறக்கவிருக்கும் குழந்தைக்கும் உடல் நிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.எனவே, எதிர்வரும் காலங்களில் கடலூரில் இரத்த சோகை இல்லாத நிலையினை உருவாக்க வேண்டும் என்பதை ஒரு இலக்காக கொண்டு, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே இரத்த சோகையினை கண்டறிந்து குணப்படுத்தும் நோக்கில் மாவட்ட நிருவாகத்தின் சார்பில் எடுக்கப்பட்ட ஒரு முன்முயற்சி திட்டமே “இரத்த சோகையில்லா கடலூர்“ ஆகும்.


மாணவர்கள் சீரான உணவு, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் இரத்த சோகை ஏற்படுவதை முன்னெச்சரிக்கையாக தடுக்கலாம். எனவே, மாணவர்கள் நன்றாக பழங்கள், காய்கறிகள், திணை உணவுகள் போன்ற இயற்கை உணவுகளை அதிகளவில் உட்கொண்டு நலமான சமுதாயத்தினை உருவாக்கிட வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.


இந்நிகழ்ச்சியில் பயிற்சி ஆட்சியர் மாலதி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.பொற்கொடி, பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் இராஜேந்திரன், மாவட்ட பயிற்றுநர் குழு மருத்துவர்கள் மரு.சுஜிதா, மரு.ராஜகணபதி துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%