
வந்தவாசி, ஜூலை 23:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கடைசிகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான கற்றல் செயல்பாடுகள் நிகழ்வில் காகித மடிப்பு கலைகள் பற்றிய செயலாக்க பயிற்சி நடைபெற்றது. ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை ஏ.லட்சுமிபாய் தலைமை தாங்கினார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் முன்னிலை வகித்தார். பள்ளி ஆசிரியை எம்.அனுசுயா வரவேற்றார் .
சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் எம்.தரணி பங்கேற்று, மாணவர்கள் அடிப்படை திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் காகித மடிப்பு கலைகள் பற்றிய செயல்பாடுகளை வானவில் மன்ற பொறுப்பாளர் தினேஷ் குமார் வழங்கினார். மேலும் மாணவர்கள் அறிவியல் சார்ந்த செயல்பாடுகளையும், காகித வடிவமைப்பு உருவங்களையும் தாங்களே செய்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்வில் 100 நாள் கற்றல் அடைவில் சிறப்பிடம் பெற்ற இப்பள்ளிக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?