
வி.கே.லக்ஷ்மிநாராயணன்
ராமகிருஷ்ணா நகர்
போருர், சென்னை 600 116
ஃபோன் சிணுங்கியது. எடுத்த பி.ஏ. " ஹலோ ! சாரங்கபாணி, பி.ஏ. டு ஜி. எம். ஸ்பீக்கிங் !" பவ்யமாக கூறி
னான்.?
மறுமுனையில் கர கரவென்ற குரல்
" ஹலோ ! சக்ரவர்த்தி இருக்கான்னா..
கூப்பிடு !" எக்காளமும் அலட்சியமும்
சேர்ந்து ஒலிக்க கடுப்பாகிப் போனா
ன் சாரங்கபாணி.
தன்னை அந்த நபர் ஒருமையில் அழைத்தது வேறு பிடிக்கவில்லை. இருந்தாலும் பல்லைக் கடித்துக் கொண்டு " எந்த சக்ரவர்த்தி?" பொறு
மையமாகக் கேட்டான்.
" அதான்யா...ஜி.எம்.மா இருக்கானே! அவனத்தான் கூப்பிடு!"
என்ன ஒரு கொழுப்பு! பெரிய நிறுவனத்தின் டாப் போஸ்டில் இருப்பவர். ஆறு இலக்கம் சம்பளம் வாங்கும் உயர் அதிகாரி! அவரைப்
போய் ஒருமையில் அழைப்பதா? ஆத்திரம் பற்றிக்கொண்டது.
அவர் யாராவது வேண்டுமானாலும் இருக்கட்டும். முதலில் தான் இன்னார் என்று கூற வேண்டும். பிறகு மரியா தையுடன் பேசவேண்டும். பவ்ய மில்லை. எடுத்த எடுப்பில் ' அவன்
இவன் ' என்று அழைத்தது கொஞ்ச ங்கூடப் பிடிக்கவில்லை.
மேற்கொண்டு எதுவும் பேசாமல் ஃபோனை வைத்தான் சாரங்கபாணி. காலையில் மூடு அவுட் ஆனது .
அடுத்த பத்தாவது நிமிஷம் ஜி.எம். அழைப்பதாக பியூன் வந்து சொல்ல, ஜி.எம்.அறைக்குப் பறந்தான் சார ங்கபாணி. " எக்ஸ்யூஸ் மி சார் !"
ஃபைல் பார்த்துக்கொண்டிருந்த சக்கரவர்த்தி தலை நிமிர்ந்தார். " சாரங்கபாணி ! கொஞ்ச நேரம் முன்னால எனக்கு ஃபோன்
வந்ததா?"
சாரங்கபாணிக்கு வேர்த்துவிட்டது. நடுக்கமும் ஏற்பட்டது. மலங்க மலங்க முழித்தான்.' யாரோ ஜி.எம்.முக்கு வேண்டியவர்தான் ஃபோன் செய்திருக்கவேண்டும். ஆத்திரத்
தில் ரிஸீவரை வைத்து விட கோபம் கொண்ட நபர் ஜி.எம்மிடத்தில் போட்டுக் கொடுத்துவிட்டார். தான் இன்னார் என்று ஆரம்பத்தில்
கூறியிருந்தால் சுதாரித்திருக்கலாம். சே ! வகையாக?மாட்டிக்கொ ண்டோ மே...' அச்சத்தில் மனசு கிடந்து தவி
த்தது.
" சார் ! ...வந்து...." தயங்கித் தயங்கி பேச ஆரம்பித்தான். " ஃபோன்ல உங்களை ஒருமாதிரியா அழை த்தார்..அதோடு தான் இன்னார்ன்னு சொல்லாம ஒருமையில அவர் பேசினது பிடிக்கல்ல. அதனால கட்
பண்ணிட்டேன். நான் செஞ்சது தவறுன்னா மன்னிச்சிடுங்க சார் !"
" ஃபோன் பண்ணது யார் தெரியுமா ? என்னோட ஃபாதர் ! என் பர்சனல்
லிங்க் எங்கேஜ்டா இருந்ததாலே
அங்கே காண்டாக்ட் பண்ணியிருக்
கார். "
" சார்...." அரண்டு போனான் சாரங்க பாணி." சார் ! அழைச்சது உங்க ஃபாதர்ங்குறது எனக்கு தெரியாமப் போச்சு...ஐயம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி சார் !" அப்படியே ஒடுங்கிப் போய்
நின்றான்.
" இட்ஸ் ஆல்ரைட் சாரங்கபாணி! தப்பு உங்க பேர்ல இல்ல. எங்கப்பா ரெயி ல்வே யில் ஒரு பெரிய போஸ்ட்லே ர்ந்து ரிடையரானவர். சுபிரியாரடி காம்ப்ளெக்ஸ் ஜாஸ்தி. இன்னும்
தான் பதவியில இருக்குறமாதிரி எண்ணிண்டு நடந்துக்கிறார். தன்னை யாரும் கேள்வி கேட்கக் கூடாது சொன்ன படி நடக்கணுங்குற
ஒரு ஈகோ ! அதனாலதான் ஃபோன்ல நீங்க ஒரு மூணாவது மணுஷர்ன்னு தெரிஞ்சும் உங்கக்கிட்ட அப்படி பேசியிருக்கார். ஜஸ்ட் ஃபர்கெட் இட் !"
" ஓ.கே சார் ! " நல்ல வேளையாக
ஜி.எம். தன்னை தப்பாக எடுத்துக்
கொள்ளாமல் போனது தன் நல்ல
காலம் என நினைத்தான். மனசு லேசாகிப்போய் தன் இருக்கைக்குத்
திரும்பினான் சாரங்கபாணி.
...........................................