கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம்


திருக்கார்த்திகை தீப

மாலைப் பொழுதில்…

அக்னி தெய்வத்தின்

பொன்மயமான மலையில்

ஆயிரம் ஜோதி மலர்கிறது

 

ஒவ்வோர் விளக்கிலும்

இறையொளி துளிர்க்க

மனங்குளிரும் தீபத்தில்

மறையாத பக்தி மிளிர்கிறது 


காற்றின் மென்மை தாலாட்ட

இரவின் கருமை இருளில்

ஒளி வணக்கம் செய்ய…


காதலாய் குவியும் ஒளியில்

காய்ந்த மனங்களும் 

மீண்டும் ஒளிர்கின்றன


மாடம் மாடமாக மின்னும்

எண்ணெய் தீபங்களால்

எண்ணங்களும் சுத்தமாக

பக்தியின் நெருப்பு

பழி, பாவம், பயம் நீக்கும்


வாழ்வின் இருளை 

அகற்றும் இத்தீபம்…


இறைநேசம் பேசி

மன மகிழ்ந்து ஒளிர,

கார்த்திகை தீபம்

எங்கள் உள்ளத்தில் என்றும் ஏற்றப்பட்டே இருக்கட்டும்.


🪔 இனிய கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்! 🪔


நா.பத்மாவதி

கொரட்டூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%